மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 25 ஜூலை 2021

நீலகிரி பெண்ணை பாராட்டிய பிரதமர்!

நீலகிரி பெண்ணை பாராட்டிய பிரதமர்!

நீலகிரியில் ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவையைச் செய்து வரும் ராதிகா சாஸ்திரி என்பவரைப் பாராட்டி மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் பேசினார்.

நீலகிரி மாவட்டம், குன்னுார் வண்டிச்சோலையை சேர்ந்த தன்னார்வலர் ராதிகா சாஸ்திரி. இவர், நீலகிரியில் முதல் முறையாக ஆம்புரெக்ஸ் என அழைக்கும், ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவையை செய்து வருகிறார். ரூ.21 லட்சம் செலவில் நீலகிரியில் கடந்த 4ஆம் தேதி இந்த ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம் செய்யப்பட்டது. மலை கிராமங்களில் வசிப்பவர்களுக்கு எளிதில் மருத்துவ உதவி கிடைக்க இந்த சேவையை ராதிகா சாஸ்திரி தொடங்கினார்.

இந்நிலையில் பிரதமர் மோடி இன்றைய (ஜூலை 25) மன் கி பாத் நிகழ்ச்சியில், ராதிகா சாஸ்திரியை பாராட்டினார்.

இதுகுறித்து பிரதமர் பேசுகையில், “மலைப் பிரதேசங்களில் வசிக்கும் நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்காக அவர்களுக்கு எளிதான போக்குவரத்து வசதியை ஏற்படுத்தித் தருவதே ஆம்புரெக்ஸ் திட்டத்தின் முக்கிய நோக்கம். ராதிகா குன்னூரில் ஓர் உணவகத்தை நடத்தி வருகிறார். ஆம்புரெக்ஸ் சேவையைத் தொடங்குவதற்காக உணவகத்தைச் சேர்ந்த தமது நண்பர்களிடம் அவர் நிதி உதவியைப் பெற்றார். இன்று, நீலகிரி மலைப்பிரதேசத்தில் 6 அவசர சிகிச்சை ஊர்திகள் இயங்குவதுடன், அவசர நிலையின்போது தொலைதூரத்தில் வசிக்கும் நோயாளிகளுக்கு இவை மிகவும் உதவிகரமாக உள்ளன. ஸ்டெரக்சர், ஆக்சிஜன் சிலிண்டர், முதலுதவி பெட்டியை அடங்கியதாக அவரது ஆம்புலன்ஸ் ஆட்டோ செயல்படுகிறது. நமது பணிகளுக்கு இடையே இது போன்ற சேவைகளைச் செய்ய வேண்டும்” என்று பிரதமர் கூறினார்.

பிரதமரின் பாராட்டை தொடர்ந்து, ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன், ராதிகா சாஸ்திரியை தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

சமுதாயத்திற்கு தம்மால் ஏதாவது ஒரு வகையில் சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியதாகக் கூறும் ராதிகா சாஸ்தரி, “பிரதமர் பாராட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது குன்னூர், கோத்தகிரி, உதகை ஆகிய இடங்களில் 6 ஆட்டோ அவசரகால ஊர்திகள் இயக்கப்பட்டு வருகிறது. குறுகலான பாதைகளில் பயணித்து குக்கிராமங்களில் வசிக்கும் நோயாளிகளையும் மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்து வந்து சிகிச்சை அளிப்பதற்கு இந்தப் புதிய அவசர சிகிச்சை ஊர்தி பேருதவியாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

-பிரியா

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் ...

3 நிமிட வாசிப்பு

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் கேள்வி!

புதுச்சேரி எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

5 நிமிட வாசிப்பு

புதுச்சேரி  எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன? ...

13 நிமிட வாசிப்பு

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன?

ஞாயிறு 25 ஜூலை 2021