மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 25 ஜூலை 2021

ஜார்ஜ் பொன்னையா விவகாரம்: அருமனை கிறிஸ்துவ பிரமுகர் கைது!

ஜார்ஜ் பொன்னையா விவகாரம்: அருமனை கிறிஸ்துவ பிரமுகர்  கைது!

கன்னியாகுமரி மாவட்டத்தில் மத மோதலை உருவாக்கும் வகையில் பேசியதாகவும், பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோரை அவதூறாக பேசியதற்காகவும் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா நேற்று (ஜூலை 24) கைது செய்யப்பட்ட நிலையில்... அந்த அருமனை கண்டனக் கூட்டத்தை ஏற்பாடு செய்த அருமனை கிறிஸ்துவப் பேரவை தலைவரான ஸ்டீபனை இன்று (ஜூலை 25) கைது செய்தனர் போலீஸார்.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் கடந்த ஜூலை 18 ஆம் தேதி மலங்கரை ஆலய அனுமதி தொடர்பான கண்டனக் கூட்டத்தில் இந்துமதம் , மத்திய, மாநில அரசுகள் குறித்து இழிவுபடுத்தி பேசியதாக பனைவிளை பங்குதந்தை ஜார்ஜ்பொன்னையா கைது செய்யப்பட்டார்.

இரண்டு ஜாதி , இரண்டு மதம் இடையே விரோதத்தை உருவாக்குதல், பொதுஅமைதிக்கு பங்கம் வகுத்தல், மதநம்பிக்கைகளை அவதூறு செய்தல் என 7 பிரிகள் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நேற்று அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அந்த கண்டனக் கூட்டத்தின் ஒருங்கிணைப்பாளரும் ஏ 1 ஆக குற்றம் சாட்டப்பட்டவருமான அருமனை கிறிஸ்தவ இயக்க செயலாளரான ஸ்டீபன் காரோடு பகுதியில் இன்று காலை கைது செய்யப்பட்டார்.

ஜார்ஜ் பொன்னையா கைது செய்யப்பட்ட நிலையில் ஸ்டீபன் கேரளாவுக்கு தப்பிச் செல்ல முயன்றதாகவும் அப்போது அவர் கைது செய்யப்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் கூறுகிறார்கள்.

குழித்துறை மாஜிஸ்திரேட் முன் இன்று காலை ஆஜர்ப்படுத்தப்பட்ட அருமனை ஸ்டீபன் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். இதையடுத்து அவர் நாகர்கோவில் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஜெயலலிதா, பிறகு டிடிவி தினகரன், பின் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை வரவழைத்து கிறிஸ்துமஸ் விழாவை அருமனையில் பிரம்மாண்டமாக நடத்தியவர் ஸ்டீபன். அவர் மீது பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதால் ஸ்டீபனை குண்டர் சட்டத்தில் கைது செய்யும்படி மாவட்ட எஸ்பிக்கு பாஜக தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

-வேந்தன்

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

ஞாயிறு 25 ஜூலை 2021