மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 25 ஜூலை 2021

மருத்துவமனையில் ஜார்ஜ் பொன்னையா

மருத்துவமனையில் ஜார்ஜ் பொன்னையா

மதங்களுக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசுதல், பிரதமர், முதல்வர் உள்ளிட்டவர்களை அவதூறு செய்தல் போன்ற குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டுள்ள பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கிறிஸ்துவ மத போதகரான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை தனிப்படைகள் அமைத்து தேடி வந்த நிலையில் நேற்று (ஜூலை 24) மதுரை அருகே கைது செய்யப்பட்டார்,

அங்கிருந்து குழித்துறை கொண்டு செல்லப்பட்ட அவர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று மாலை ஆஜர்ப்படுத்தப்பட்டார். ஜார்ஜ் பொன்னையாவை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில், மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பின் அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆனால், சிறைக்குசென்ற சில மணித்துளிகளிலேயே தனக்கு நெஞ்சு வலிப்பதாக ஜார்ஜ் பொன்னையா கூற, அவர் உடனடியாக நேற்று இரவு பாளையங்கோட்டை சிறையிலேயே இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது உடல் நிலையைப் பொறுத்து அவர் வெளியே இருக்கும் அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்படவேண்டுமா என்பது குறித்து மருத்துவர்கள் முடிவெடுப்பார்கள் என்கிறார்கள் சிறைத் துறை வட்டாரத்தினர்.

-வேந்தன்

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

4 நிமிட வாசிப்பு

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

’மத்திய’ பிரதேசத்தில் இருந்து எம்பியாகும் ஒன்றிய அமைச்சர் ...

4 நிமிட வாசிப்பு

’மத்திய’ பிரதேசத்தில் இருந்து எம்பியாகும் ஒன்றிய அமைச்சர்  முருகன்

ஒரு கட்சிக்குக் காய்ச்சலே வந்துவிட்டது: மோடி

3 நிமிட வாசிப்பு

ஒரு கட்சிக்குக் காய்ச்சலே வந்துவிட்டது: மோடி

ஞாயிறு 25 ஜூலை 2021