மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 25 ஜூலை 2021

ஐஎன்எக்ஸ் வழக்கு: அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ்!

ஐஎன்எக்ஸ் வழக்கு: அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ்!

ஐஎன்எக்ஸ் வழக்கு தொடர்பான ஆவணங்களை வழங்குமாறு ப.சிதம்பரம் தொடர்ந்த வழக்கில் அமலாக்கத் துறைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

2007ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராகக் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் இருந்தார். அப்போது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு வெளிநாடுகளிலிருந்து ரூ.305 கோடி நிதி பெறுவதற்கு, வெளிநாட்டு முதலீடு மேம்பாட்டு வாரியத்தின் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் முறைகேடு நடைபெற்றதாகக் குற்றம்சாட்டி சிதம்பரம் மீதும், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீதும் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் 2019ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம், டிசம்பர் 4ஆம் தேதி வெளியே வந்தார். ப.சிதம்பரம் மீதான கைது நடவடிக்கை, அவரை ஜாமீன் எடுக்க நடைபெற்ற சட்டப்போராட்டம், அவர் சிறையில் எப்படி இருந்தார் என அனைத்தும் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் ப.சிதம்பரம் சார்பில் அவரது வழக்கறிஞர் அர்ஷ்தீப் சிங் குரானா டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்தார். அதில், ஐஎன்எக்ஸ் வழக்கு தொடர்பான சில ஆவணங்களையும், அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் நகல்களையும் வழங்க உத்தரவிடுமாறு கேட்கப்பட்டிருந்தது.

இவ்வழக்கை நேற்று விசாரித்த சிறப்பு நீதிபதி எம்.கே.நாக்பால், இம்மனு மீது ஆகஸ்ட் 9ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு அமலாக்கத் துறைக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டார்.

-பிரியா

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

5 நிமிட வாசிப்பு

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன? பாமக மறுப்பது ஏன்?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன?  பாமக மறுப்பது ஏன்?

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

6 நிமிட வாசிப்பு

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

ஞாயிறு 25 ஜூலை 2021