மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 25 ஜூலை 2021

அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லை: செந்தில் பாலாஜி

அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லை: செந்தில் பாலாஜி

எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காகச் சோதனை நடத்தப்படவில்லை, சொத்து மதிப்பு உயர்ந்ததன் அடிப்படையில்தான் நடத்தப்பட்டது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் கடந்த ஜூலை 22ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்பட்டது. இதில் ரூ.25 லட்சமும், சில முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முன்னாள் அமைச்சர் மீது எடுக்கப்பட்ட முதல் நடவடிக்கை இதுவாகும்.

இந்த சோதனை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக நடத்தப்பட்ட சோதனை என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்தனர். அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடும் இதுபோன்ற மலிவான ஆயுதத்தை திமுக அரசு கையில் எடுத்து இருக்கிறது என்று தெரிவித்த அவர்கள் திமுக அரசுக்கு எதிராக வரும் ஜூலை 27ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தனர்.

இந்த நிலையில் இது அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை இல்லை என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

வட சென்னை அனல்மின் நிலையம் அலகு 2இல் அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று (ஜூலை 24) திடீர் ஆய்வு மேற்கொண்டார். அனல்மின் நிலையத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம்,

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்குச் சொந்தமான இடங்களில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே சோதனை மேற்கொள்ளப்பட்டதா எனச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த அவர், “சொத்து மதிப்பு உயர்ந்துள்ளதன் அடிப்படையிலும், ஆளுநரிடம் அளித்துள்ள புகாரின் அடிப்படையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேர்தல் வாக்குறுதியில், ஊழல் செய்த அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்திருந்தார்.

இந்த மூன்று மாத திமுக ஆட்சியில் அரசு பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறது. படிப்படியாக அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். கடந்த 10 ஆண்டு ஆட்சியில் அதிமுக கூறிய வாக்குறுதிகளான, ‘மக்களுக்கு இலவச செல்போன்’ போன்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதா” என்று கேள்வி எழுப்பினார்.

தேர்தலின் போது கரூர் தொகுதியில், செந்தில் பாலாஜிக்கும், எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கும் கடும் போட்டி நிலவியது. இதில், செந்தில் பாலாஜி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

-பிரியா

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. ...

6 நிமிட வாசிப்பு

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. தர்ணா!

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

5 நிமிட வாசிப்பு

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

3 நிமிட வாசிப்பு

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

ஞாயிறு 25 ஜூலை 2021