மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 24 ஜூலை 2021

ட்விட்டர் கணக்கு மீட்பு: டிஜிபிக்கு நன்றி சொன்ன குஷ்பு

ட்விட்டர் கணக்கு மீட்பு: டிஜிபிக்கு நன்றி சொன்ன குஷ்பு

ட்விட்டர் கணக்கை மீட்டுக் கொடுத்ததற்காக தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபுவிற்கு பாஜக நிர்வாகி குஷ்பு நன்றி தெரிவித்துள்ளார்.

பாஜக நிர்வாகியும், நடிகையுமான குஷ்புவின் ட்விட்டர் பக்கம் கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டது. அதிலிருந்த அனைத்து ட்வீட்களும் அழிக்கப்பட்டன. இதுதொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபுவை சந்தித்த குஷ்பு, புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், “எனது ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. இது குறித்து டுவிட்டர் நிறுவனத்திடம் புகார் அளித்தும் எந்த பயனுமில்லை. எனது ட்விட்டர் பக்கத்தை தவறாக யாரும் பயன்படுத்தி விடக்கூடாது. ட்விட்டர் பக்கத்தை முடக்கியவர்கள் யார் என்பதை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாருக்கு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டார். இதையடுத்து, குஷ்புவின் ட்விட்டர் கணக்கை முடக்கியது யார் என்ற விவரத்தை வழங்குமாறும், அந்த கணக்கை மீண்டும் அவரிடமே வழங்குமாறும் ட்விட்டர் நிறுவனத்துக்கு போலீசார் கடிதம் எழுதினர்.

இதையடுத்து, குஷ்புவின் ட்விட்டர் கணக்கு மீட்கப்பட்டது. ஆனால், ஹேக் செய்தவர்கள் யார் என்று தெரியவில்லை.

தற்போது, மீட்கப்பட்ட தன்னுடைய ட்விட்டர் கணக்கில் புதிதாக முகப்பு படத்தை மாற்றிய குஷ்பு, “தனது ட்விட்டர் கணக்கை பாதுகாப்புடன் மீட்டுக் கொடுத்த டிஜிபி சைலேந்திர பாபுவிற்கும் அவரது குழுவினருக்கும் நன்றி” என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

-வினிதா

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய ...

6 நிமிட வாசிப்பு

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய அமைச்சர்!

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

8 நிமிட வாசிப்பு

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

5 நிமிட வாசிப்பு

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

சனி 24 ஜூலை 2021