மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 24 ஜூலை 2021

பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது!

பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது!

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டிருக்கிறார்.

குமரி மாவட்டம் அருமனை யைச் சேர்ந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா சில நாட்களுக்கு முன்பு இந்து கடவுள்களைப் பற்றி விமர்சித்தும் பிரதமர் மோடி தமிழக அமைச்சர்கள் குமரி சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரை இழிவுபடுத்தும் வகையிலும் பேசியிருந்தார்.

குறிப்பாக தற்போது நடைபெறும் திமுக ஆட்சி என்பது கிறிஸ்தவர்கள் போட்ட பிச்சை என்ற ரீதியில் அவர் பேசியிருந்தார். ஒரே நேரத்தில் பாஜக மற்றும் திமுக ஆகிய இரு கட்சியினரின் எதிர்ப்பையும் பெற்ற பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா வை கைது செய்யக் கோரி அரசுக்கு கோரிக்கைகள் வலுத்தன.

இந்த நிலையில் இரு பிரிவினரிடையே கலவரத்தை உண்டு பண்ணுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு தொடுக்கப்பட்டு 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா தேடப்பட்டு வந்தார்.

நேற்று நள்ளிரவு மதுரை கருப்பாயூரணி பகுதியில் சுற்றி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது தனிப்படை போலீசாரும் போக்குவரத்து போலீசாரும் ஜார்ஜ் பொன்னையாவை கைது செய்தனர்.

அங்கிருந்து கள்ளிக்குடி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜார்ஜ் பொன்னையா குமரிமாவட்ட போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார் என்று தெரிகிறது.

வேந்தன்

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த ‘விஷய’ பாஸ்கர்!

8 நிமிட வாசிப்பு

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த  ‘விஷய’ பாஸ்கர்!

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

2 நிமிட வாசிப்பு

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

8 நிமிட வாசிப்பு

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

சனி 24 ஜூலை 2021