மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 24 ஜூலை 2021

பன்னீர், எடப்பாடி ஒற்றுமையில்லை-ஒற்றைத் தலைமை நான்தான்: சசிகலா

பன்னீர், எடப்பாடி ஒற்றுமையில்லை-ஒற்றைத் தலைமை நான்தான்: சசிகலா

அதிமுகவுக்கு இப்போது ஒற்றைத் தலைமைதான் வேண்டுமென்றும் அது நான் தான் என தொண்டர்கள் விரும்புவதாகவும் நேரடியாகவே சசிகலா தெரிவித்துள்ளார்.

ஜெயா தொலைக்காட்சிக்கு அளித்த ‘புரட்சியின் தொடர்ச்சி’என்ற நேர்காணலில் இதை அவர் தெரிவித்துள்ளார். ஜூலை 23 ஆம் தேதி பத்திரிகையாளர் துரை கருணாவின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ள சசிகலா,

“திமுக எம்.ஜி.ஆராலேயே வளர்ந்தது. அண்ணா மேல் அவர் வைத்திருந்த பிரியத்தால் கடுமையாக உழைத்தார். ஆனால் திடீரென அவரை வெளியே தூக்கிப் போட்டுவிட்டார்கள். அதில் பாதிக்கப்பட்டவரும் கூட அவர். அதனால் அவர் அதிமுக ஆரம்பிக்கும்போது, சட்ட திட்ட விதிகள் பற்றி ஆலோசிக்கும்போது, ‘என்னை திமுகவில் இருந்து வெளியே தூக்கிப் போட்ட மாதிரி,வருங்காலங்களில் இந்த கட்சியில், நான் ஆரம்பிக்கிற கட்சியில் என்றும் தவறு நடந்துவிடக் கூடாது. அதனால் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்கும் முறை தொண்டர்கள் தேர்ந்தெடுக்கும் முறையாக இருக்க வேண்டும்’ என்ற விதியைக் கொண்டுவந்து, ‘இதை எந்த காலத்திலும் யாராலும் மாற்ற முடியாது’என்றும் கொண்டுவந்தார். அதுதான் கட்சியின் அஸ்திவாரம்.

தொண்டர்கள் பூரா என்னைதான் விரும்புகிறார்கள். இந்தக் கட்சிக்கு முதல் தொண்டராகத்தான் நான் இருப்பேன் . தொண்டர்களின் முடிவுதான் பொதுச் செயலாளர் யார் என்பதை நிர்ணயிப்பது. அதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

நீதிமன்ற வழக்கு ஒருபக்கம். இனொரு பக்கம் தொண்டர்களின் விருப்பம், நான் தான் இருக்க வேண்டும் என்பது. இந்த நிலையில் சட்டத்துக்கும் நாம் மரியாதை கொடுத்து நீதிமன்றத் தீர்ப்பையும் எதிர்பார்த்து இருக்கேன்” என்று கூறியுள்ளார் சசிகலா.

மேலும், அவர், “ எடப்பாடி -பன்னீர் இருவருமே தனித்தனியாகத்தான் இருக்கிறார்கள். அவர்கள் ஒன்றுபட்டு இருப்பதுபோல தெரிவதில்லை. அவர்கள் ஒன்றுபட்டு இருந்தால் கழகத் தொண்டர்கள் ஒற்றைத் தலைமை வேண்டும் என்று விரும்ப மாட்டார்கள். இதில் இருந்தே அவர்களிடம் ஒற்றுமை இல்லை என்பதும், தப்பு இருக்கு என்றும் தெளிவாக தெரியுது.

ஒரு காரில் இரண்டு ஸ்ட்ரியங் வைத்து ஓட்ட முடியாது. அப்படி ஓட்டினால் அந்த கார் இலக்கை அடையாது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும். எல்லாரும் சமம் என்பது இன்றைய அதிமுகவில் இல்லை. வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. ஒற்றுமையா இருக்கிறார்கள் என்றால்... இது என்னுடைய ஆள், அது உன்னுடைய ஆள் என்ற பேச்சே வரக் கூடாது. அப்படி வரும்போதே இரண்டு பிரிவு இருக்கிறது என்பது ஊர்ஜிதமாகிறது” என்று தெரிவித்துள்ளார் சசிகலா.

ஒற்றைத் தலைமை என்பது நீங்கள்தான் (சசிகலாதான்) என்று செயற்குழு, பொதுக்குழு கூடி முடிவெடுக்க வாய்ப்பிருப்பதாக நீங்கள் கருதுகிறீர்களா என்ற கேள்விக்கு,

“நிச்சயமாக வாய்ப்பு இருக்கிறது. காரணம்,தொண்டர்கள் எந்தப் பக்கம் நிற்கிறார்கள் என்பதைப் பொறுத்துதான் செயற்குழு, பொதுக்குழு முடிவே வரும். அதனால் நிச்சயமாக செயற்குழு,பொதுக்குழுவில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது” என்று பதிலளித்துள்ளார் சசிகலா.

இதற்காக கொரோனா ஊரடங்கு முடிந்தவுடன் ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று வணங்கிவிட்டு தொண்டர்களை நிர்வாகிகளைச் சந்திப்பேன் என்றும் கூறியுள்ளார் சசிகலா.

-வேந்தன்

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

6 நிமிட வாசிப்பு

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

4 நிமிட வாசிப்பு

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

சனி 24 ஜூலை 2021