மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 23 ஜூலை 2021

அமைச்சரின் அறிக்கையை கிழித்த எம்.பி சஸ்பெண்ட்!

அமைச்சரின் அறிக்கையை கிழித்த எம்.பி சஸ்பெண்ட்!

மாநிலங்களவையில் ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கையில் இருந்த பேப்பரை பிடுங்கி எறிந்ததால் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி சந்தானு சென் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அவைத்தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார்.

இஸ்ரேல் நாட்டின் என்எஸ்ஒ என்ற நிறுவனத்தின் பெகாசஸ் மென்பொருள் மூலம் இந்தியா உள்பட உலக தலைவர்கள், பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் வேவு பார்க்கப்பட்ட சம்பவம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 19ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாளிலிருந்தே பெகாசஸ் விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மாநிலங்களவையில் நேற்று(ஜூலை 22) ஒன்றிய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பெகாசஸ் தொடர்பாக ஓர் அறிக்கையை வாசித்து கொண்டிருந்தார். அப்போது, குறுக்கிட்ட திரிணமூல் காங்கிரஸ் எம்.பி சாந்தனு சென் அமைச்சர் கையிலிருந்த பேப்பரை பிடுங்கி,அதை கிழித்து மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங்கை நோக்கி எறிந்தார். இதனால் அவையில் பெரும் கூச்சல் ஏற்பட்டதையடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது.

இன்று(ஜூலை 23) மீண்டும் தொடங்கிய மாநிலங்களவையில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வி. முரளிதரன் எம்.பி சாந்தனுவை அவையிலிருந்து சஸ்பெண்ட் செய்வதற்கான தீர்மானத்தை கொண்டு வந்தார்.

இதுதொடர்பாக பதிலளிக்க வாய்ப்பு அளிக்கப்படவில்லை என எதிர்க்கட்சிகள் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தன. இருப்பினும், குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, மாநிலங்களவையில் மழைக்கால கூட்டத் தொடரின் மீதமுள்ள காலத்தில், கூட்டத்தொடரில் கலந்து கொள்வதில் இருந்து திரிணமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தனு சென் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இதுகுறித்து பேசிய அவைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு, மாநிலங்களவையில் நேற்று நடந்த சம்பவங்கள் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது. அமைச்சர் கையில் இருந்த காகிதங்களை கிழித்து எறிந்த செயல் அவையில் இதுவரை இல்லாத அளவு நடந்த மோசமான சம்பவமாகும். நமது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு இழுக்கானது. துரதிருஷ்வசமானது. சந்தானு சென், தயவுசெய்து அவையிலிருந்து வெளியேறுங்கள். சபையை செயல்பட அனுமதிக்கவும்” என்று கூறினார்.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி சாந்தனு சென் மாநிலங்களவையில் இருந்து வெளியேற மறுப்பு தெரிவித்ததால் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது. இதற்கு பின்னரும் எம்.பி சாந்தனு அவையிலுள்ள தன்னுடைய சீட்டிலே அமர்ந்திருந்தார்.

எம்.பி சாந்தனுவை உள்ளே அனுமதிக்கக் கூடாது என்ற அறிவுரையுடன் அவரின் புகைப்படம் நாடாளுமன்றத்தின் அனைத்து நுழைவு வாயில்களில் உள்ள பொறுப்பாளர்களுக்கும் அனுப்பப்பட்டது.

-வினிதா

சொந்தக் கட்சியினர் மீதும் பிறாண்டத் தொடங்கிய பி.டி.ஆர்: முதல்வர் ...

8 நிமிட வாசிப்பு

சொந்தக் கட்சியினர் மீதும் பிறாண்டத் தொடங்கிய பி.டி.ஆர்:  முதல்வர்  ஆக்‌ஷன் என்ன?

தொழிலாளி கொலை: கைதாவாரா திமுக எம்.பி?

6 நிமிட வாசிப்பு

தொழிலாளி கொலை: கைதாவாரா திமுக எம்.பி?

நான் வழக்குப் போட்டேனா? திமுகவுக்கு எடப்பாடி நேரடி கேள்வி!

4 நிமிட வாசிப்பு

நான்  வழக்குப் போட்டேனா?  திமுகவுக்கு எடப்பாடி நேரடி கேள்வி!

வெள்ளி 23 ஜூலை 2021