மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 23 ஜூலை 2021

'நிர்பயா' ஆலோசனை மையம் : சங்கர் ஜூவால்

'நிர்பயா' ஆலோசனை மையம் : சங்கர் ஜூவால்

சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நிர்பயா பெயரில் பெண்களுக்கான சிறப்பு ஆலோசனை மற்றும் உதவி மையத்தைச் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இன்று (ஜூலை 23) தொடங்கி வைத்தார்.

பாலியல் தொந்தரவு, வரதட்சணை பிரச்சினை என பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இவற்றைத் தடுக்கும் வகையிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி மற்றும் ஆலோசனை வழங்கும் வகையிலும் புதிய மையத்தை இன்று தொடங்கியுள்ளார் சென்னை ஆணையர். காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள தரை தளத்தில் இந்த மையம் திறக்கப்பட்டுள்ளது.

இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை ஆணையர் சங்கர் ஜிவால், குழந்தைகள் மற்றும் பெண்களுக்காக 3 ஆண்டு திட்டமாக இந்த மையத்தை தொடங்கியிருக்கிறோம். சமூக நலத்துறை உதவியுடன் இந்த உதவி மையம் செயல்படும்.

பெண்கள் ஆலோசகர், குழந்தைகள் ஆலோசகர், சட்ட ஆலோசகர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வரும் கூறியிருக்கிறார்.

இன்று ஆணையர் அலுவலகத்தில் இந்த மையம் தொடங்கப்பட்டுள்ளது. புதிய கட்டடம் வந்ததும் அங்கு மாற்றப்படும். 181 என்ற இந்த கட்டணமில்லா எண்ணுக்கு அழைத்து உதவி மையத்தில் பெண்களும் சிறார்களும் ஆலோசனை பெறலாம். நிர்பயா திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் நிதியிலிருந்து இந்த உதவி மையத்துக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பெண் வன்கொடுமை, வரதட்சணை, குழந்தை திருமணம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்த மையம் தொடங்கப்பட்டுள்ளது. பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு மருத்துவ உதவி வழங்கப்படும் ” என்று தெரிவித்தார்.

-பிரியா

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான ...

7 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான அதிரடி!

மின்னம்பலம் செய்தி எதிரொலி: அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் ...

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி எதிரொலி:  அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் அறிவுறுத்தல்!

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

5 நிமிட வாசிப்பு

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

வெள்ளி 23 ஜூலை 2021