மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 23 ஜூலை 2021

நீட் தேர்வை ஒத்தி வைக்கும் திட்டம் இல்லை: ஒன்றிய அமைச்சர்!

நீட் தேர்வை ஒத்தி வைக்கும் திட்டம் இல்லை: ஒன்றிய அமைச்சர்!

நீட் தேர்வை ஒத்தி வைக்கும் திட்டம் இல்லை என்று ஒன்றிய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பாரதி பர்வீன் பவார் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், விசிக எம்பி ரவிக்குமார் ஆகியோர் நீட் தேர்வு தொடர்பாக இன்று கேள்வி எழுப்பினர்.

கொரோனா மூன்றாம் அலை காரணமாக நீட் தேர்வு உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்யும் திட்டம் ஏதேனும் உள்ளதா? என்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிச் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வை கொண்டுவரும் திட்டம் உள்ளதா என்றும் கேள்வி எழுப்பினர்.

இதற்கு எழுத்துப்பூர்வமாகப் பதில் அளித்த ஒன்றிய அமைச்சர் பாரதி பர்வின் பவார், “திட்டமிட்டபடி நீட் தேர்வு நடைபெறும். முதுநிலை நீட் தேர்வு செப்டம்பர் 11ஆம் தேதியும், இளங்கலை நீட் தேர்வு செப்டம்பர் 12ஆம் தேதியும் நடைபெறும்.

தேர்வு எழுதும் மற்றும் தேர்வு கண்காணிப்பாளர்களுக்கு கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

அதிகளவிலான கூட்டத்தைத் தவிர்க்கவும், மாணவர்கள் வெகுதூரம் பயணிப்பதைத் தவிர்க்கவும் தேர்வு மையங்கள் அதிகரிக்கப்படும்.

தேர்வர்களுக்கு வழங்கப்படும் அட்மிஷன் கார்டுகள் சுலபமாகப் பயணிப்பதற்கான இ-பாஸாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

தேர்வு மையங்களுக்குள் செல்லும் போதும் வெளியில் வரும் போதும் கூட்டம் இல்லாதவாறு பார்த்துக்கொள்ளப்படும்.

தேர்வு மையங்களில் மாணவர்களுக்கு வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்படும். வெப்பநிலை சரியாக இருப்பவர்கள் மட்டுமே தேர்வறைக்கு அனுமதிக்கப்படுவார்கள். வெப்பநிலை அதிகமாக இருப்பவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட ஆய்வகத்தில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

மாஸ்க் அணிவது கட்டாயம். தேர்வர்களுக்கு முகக் கவசம், ஃபேஸ் ஷீல்டு மற்றும் சானிடைசர் ஆகியவற்றை உள்ளடக்கிய பாதுகாப்பு கிட் வழங்கப்படும்.

கலை மற்றும் அறிவியல் தேர்வுகளை பொறுத்தவரைப் பல்கலைக்கழகங்கள் / மாநில அரசுகளே நடத்துகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-பிரியா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

வெள்ளி 23 ஜூலை 2021