மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 23 ஜூலை 2021

காவலர்கள் பேருந்துகளில் கட்டாயம் டிக்கெட் எடுக்க வேண்டும்: டிஜிபி

காவலர்கள் பேருந்துகளில் கட்டாயம் டிக்கெட் எடுக்க வேண்டும்: டிஜிபி

காவலர்கள் சொந்த தேவைக்காக பேருந்தில் செல்லும்போது டிக்கெட் எடுத்துதான் பயணம் செய்ய வேண்டும் என்று அனைத்து காவலர்களுக்கும் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசு பேருந்துகளில் பணி நிமித்தம் மட்டுமில்லாமல் தங்கள் சொந்த வேலைக்காக செல்லும் போதும் சில காவலர்கள் டிக்கெட் எடுக்காமல் இலவசமாக பயணிக்கின்றனர். சில நேரங்களில் இது பேருந்து நடத்துனருக்கும் காவலர்களுக்கும் இடையே வாக்குவாதத்தை ஏற்படுத்துகின்றன.

கடந்த 2019ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அரசு பேருந்தில் பயணித்த தலைமைக் காவலர் டிக்கெட் எடுக்க மறுப்பு தெரிவித்து நடத்துநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் மன அழுத்தத்திற்கு ஆளான நடத்துநர் கோபிநாத் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதுதொடர்பாக மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. இதுதொடர்பாக, தமிழ்நாடு டிஜிபி விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸூம் அனுப்பப்பட்டது.எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சினைகளை தவிர்க்க, கைதிகளை அழைத்து செல்லுதல், வாரண்ட் தொடர்பான பணிகளை தவிர பேருந்துகளில் காவலர்கள் இலவசமாக பயணிக்கக் கூடாது என்று மனித உரிமை ஆணையம் அறிவுறுத்தி இருந்தது.

இந்நிலையில், மாநில மனித உரிமை ஆணைய வழக்கை மேற்கோள் காட்டி தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”கைதிகளை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லுதல், வாரண்ட் தொடர்பான பணிகள், காவல் துறை பணிகள் தவிர தங்களது சொந்த தேவைக்காக அரசு பேருந்துகளில் செல்லும்போது காவல் துறையினர் கட்டாயம் டிக்கெட் எடுத்துதான் பயணம் செய்ய வேண்டும்” என அனைத்து காவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். அதனை மற்ற அலுவலர்கள் கண்காணித்து விதிமுறைகளை முறையாக பின்பற்ற நடவடிக்கை எடுக்கவைக்க வேண்டும் எனறும் உத்தரவிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பை பேருந்து நடத்துநர்கள் வரவேற்றுள்ளனர்.

-வினிதா

மெரினாவில் சசிகலா: ஸ்டாலின் போட்ட உத்தரவு!

5 நிமிட வாசிப்பு

மெரினாவில் சசிகலா:  ஸ்டாலின் போட்ட உத்தரவு!

ஜெ.விடம் மன பாரத்தை இறக்கி வைத்தேன்: சசிகலா

3 நிமிட வாசிப்பு

ஜெ.விடம் மன பாரத்தை இறக்கி வைத்தேன்: சசிகலா

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

8 நிமிட வாசிப்பு

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

வெள்ளி 23 ஜூலை 2021