மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 23 ஜூலை 2021

அரசு சொத்துக்களை தனியாருக்கு எப்படி கொடுக்க முடியும்? : அமைச்சர் கேள்வி!

அரசு சொத்துக்களை தனியாருக்கு எப்படி கொடுக்க முடியும்? : அமைச்சர் கேள்வி!

அறநிலையத் துறை கோயில் சொத்துக்கள் தனியார் சொத்துக்கள் அல்ல என்றும் அரசு சொத்துக்களை நிர்வகிக்கும் பொறுப்பை தனியாருக்கு எப்படி கொடுக்க முடியும் என்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

அறநிலையத் துறை வசமிருக்கும் இந்து கோயில்களை இந்து அமைப்பின் அறக்கட்டளை வசம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்துக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் தங்களுடைய வழிபாட்டு தலங்களின் சொத்துக்களை அறக்கட்டளை அமைத்து நிர்வாகம் செய்வது போல் இந்துக்கள் உள்பட மற்ற அனைத்து மதங்களின் வழிபாட்டு தலங்களையும் அறக்கட்டளை மூலம் நிர்வாகிகள் நிர்வாகம் செய்ய உத்தரவிட வேண்டும் என நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில் சேலத்திலுள்ள சுகவனேஸ்வரர் மற்றும் கோட்டைமாரியம்மன் கோயிலில் இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு இன்று(ஜூலை 23) ஆய்வு மேற்கொண்டார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “அறநிலையத் துறையின் கீழ் இருக்கும் கோயில்கள் தனியாருடைய இடமும் அல்ல; தனிப்பட்டவர் சொத்தும் அல்ல. மன்னராட்சி காலங்களில் இந்த கோயில்கள் மன்னர்களால்கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. மக்களாட்சி வந்தபின் அதை அரசு நிர்வகிக்கிறது. திருக்கோயில்கள் இருக்கும் இடங்கள் ஜமீன்தார்களாலும், செல்வந்தர்களாலும், மன்னர்களாலும், நன்கொடையாக வழங்கப்பட்டது. அப்படி இருக்கும்போது, அரசு சொத்துக்களை நிர்வகிக்கும் பொறுப்பை தனியாருக்கு எப்படி கொடுக்க முடியும்? என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஏதாவது ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி தங்களை நிலைநிறுத்தி கொள்வதற்காக வைக்கப்படும் வாதமே தவிர, இது நடைமுறையில் சாத்தியமில்லை. இந்து அறநிலையத் துறையில் குறைகள் ஏதேனும் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள், அதை நிறைவாக ஏற்றுக் கொண்டு, குறைகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க அரசு தயாராக இருக்கிறது.

கோயில்களில் நன்கொடையாக வந்த நகைகளை உருக்கி தங்க கட்டியாக மாற்றி வைப்புநிதி மூலம் வருவாய் ஈட்ட திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு கோயில்களில் இருந்து திருடப்பட்ட சிலைகளை மீட்க விரைவில் முதல்வர் புதிய திட்டம் ஒன்றை அறிவிப்பார்” என்று தெரிவித்தார்.

-வினிதா

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. ...

6 நிமிட வாசிப்பு

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. தர்ணா!

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

5 நிமிட வாசிப்பு

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

3 நிமிட வாசிப்பு

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

வெள்ளி 23 ஜூலை 2021