மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 23 ஜூலை 2021

எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு: ரூ.25.56 லட்சம் பறிமுதல்!

எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு: ரூ.25.56 லட்சம் பறிமுதல்!

முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் நேற்று (ஜூலை 22) லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய திடீர் சோதனையில், ரூ.25.56 லட்சம் பணம், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

2016-21ஆம் ஆண்டுகளில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர், வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகவும், போக்குவரத்துத்துறையில் அதிக ஊழல் நடந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் அவர்மீது சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்து நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரணை நடத்தினர்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நேற்று முதல் நடவடிக்கையாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. சோதனை தொடர்பாக ஆளும்கட்சி வட்டாரத்தில் கூறும்போது, "கொரோனா கட்டுக்குள் வந்துள்ள நிலையில், இனி அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான அக்னிப் பார்வையை திமுக அரசு வீசத் தொடங்கியிருக்கிறது. அடுத்ததாக முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெறும்” என்கின்றனர். இதுகுறித்து மின்னம்பலத்தில், முதல் ஹிட் லிஸ்டில் மூன்று மாஜிக்கள்: திட்டம் மாறியது ஏன்? என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், ரூ.25.56 லட்சம் பணம், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்ட அறிவிப்பில், “முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவர் மனைவி விஜயலட்சுமி மற்றும் அவர் தம்பி சேகர் ஆகியோர் பெயரில் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளதாக புகார் எழுந்தது.

இதையடுத்து ஜூலை 21ஆம் தேதி, கரூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு, எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது 13(2)1 r/w 13(1)b, of the PC (Amendment) act 2018, மற்றும் 12 r/w, 13(2) r/w 13(1)b, of the PC (Amendment) act 2018-ன் படி வழக்கு பதிவு செய்தது

நேற்று எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவருடைய உறவினர்கள் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என சென்னையில் உள்ள வீடு உட்பட தமிழகம் முழுவதும் 26 இடங்களில் மாலை வரை சோதனை நடத்தப்பட்டது.

இதில், கணக்கில் வராத 25,56,000 ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் பல கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள், காப்பீட்டு நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகள் மற்றும் நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-பிரியா

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

5 நிமிட வாசிப்பு

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன? பாமக மறுப்பது ஏன்?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன?  பாமக மறுப்பது ஏன்?

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

6 நிமிட வாசிப்பு

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

வெள்ளி 23 ஜூலை 2021