மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 22 ஜூலை 2021

மாஜி அமைச்சரிடம் ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்கும் நடிகை!

மாஜி அமைச்சரிடம் ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்கும் நடிகை!

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் ரூ.10 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகை சாந்தினி வழக்கு தொடர்ந்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்திருந்தார். 'மணிகண்டன் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 5 ஆண்டுகள் குடும்பம் நடத்திவிட்டு ஏமாற்றிவிட்டார். அதோடு மூன்று முறை கட்டாய கருகலைப்பு செய்தார். 2019ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் மணிகண்டன் பேசியபோது நான் அவருடைய மனைவி என்ற முறையில் சட்டமன்றத்துக்குள் அனுமதிக்கப்பட்டேன். தன்னை ஏமாற்றிய மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கடந்த மே 28ஆம் தேதி புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் பேரில் மணிகண்டன் மீது அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கடந்த ஜூன் 20ஆம் தேதி பெங்களூருவில் வைத்து மணிகண்டனைத் தனிப்படை போலீசார் கைது செய்து அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

அவரை சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி ஜூலை 7ஆம் தேதி உத்தரவிட்டது.

இந்நிலையில் அமைச்சர் மணிகண்டனிடம் ரூ.10 கோடி நஷ்டஈடு கேட்டு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடிகை சாந்தினி வழக்கு தொடர்ந்துள்ளார்.

சென்னையிலிருந்து கொண்டு வழக்கை நடத்த வேண்டும் என்ற காரணத்தினால் தனக்கு மாதாந்திர இடைக்கால தொகை வழங்க வேண்டும் என அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார். திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் போது பிரச்சனை ஏற்பட்டால் இழப்பீடு கோரலாம் என்ற உத்தரவின் படி நடிகை வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

-பிரியா

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

5 நிமிட வாசிப்பு

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன? பாமக மறுப்பது ஏன்?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன?  பாமக மறுப்பது ஏன்?

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

6 நிமிட வாசிப்பு

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

வியாழன் 22 ஜூலை 2021