மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 22 ஜூலை 2021

எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை: ஓபிஎஸ் -ஈபிஎஸ் கண்டனம்!

எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை:  ஓபிஎஸ் -ஈபிஎஸ் கண்டனம்!

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தியதற்கு ஓபிஎஸ் ஈபிஎஸ் இருவரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை இன்று நடைபெற்றது. சென்னை, கரூர் உட்பட அவருக்குச் சொந்தமான 21 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. சென்னையில் காலை முதல் பிற்பகல் 3 வரை நடைபெற்றது. இந்த சோதனையில் ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என லஞ்ச ஒழிப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கரூரில் நடந்த சோதனையின் போது, ஆண்டாங்கோயில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளரை நிலம் தொடர்பான ஆவணங்களை எடுத்து வருமாறு லஞ்ச ஒழிப்புத் துறையினர் கூறியுள்ளனர். அதிகாரிகள் ஆவணங்களை எடுத்து வந்ததும், விஜயபாஸ்கரின் வீட்டின் முன் குவிந்திருந்த அதிமுக தொண்டர்கள், எதிர்ப்புத் தெரிவித்து ஆவணங்களைக் காட்டிவிட்டு உள்ளே செல்லுமாறு குரல் எழுப்பியுள்ளனர். பின்னர் அங்கே வந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிகாரிகளை உள்ளே அழைத்துச் சென்றுள்ளனர். இதனால் அங்குச் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வழக்கறிஞர் கூறுகையில், “சோதனைக்கு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறோம். அவர் அமைச்சராக இருந்த காலகட்டத்திலான சொத்துகள் குறித்த ஆவணங்களைக் கேட்டனர். அதற்கு முன்னாள் அமைச்சர் ஸ்டேட்மெண்ட் கொடுத்திருக்கிறார். எல்லாம் சரியாக இருக்கிறது” என்றார்.

எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனை குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில், “

அதிமுகவுக்கு பொதுமக்கள் மத்தியில் களங்கம் ஏற்படுத்தும் வகையில் காவல்துறையை முடுக்கிவிட்டிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.

ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சர்கள் பலர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலுவையிலிருந்து வரும் நிலையில், பல்வேறு குற்றச்சாட்டுக்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு, தற்போது பிணையிலிருந்து நீதிமன்றத்திலே வழக்கை எதிர்நோக்கியிருக்கும் திமுக அமைச்சர்கள், அதனைத் திசை திருப்புவதற்காக, வேண்டுமென்றே அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பொய்யான குற்றச்சாட்டுகளைப் புனையும் நடவடிக்கையில் திமுக அரசு ஈடுபட்டிருப்பது கண்டனத்துக்குரியது.

தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் என்னாயிற்று என்றும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய மற்றும் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றத் திராணியில்லாமல் ஆட்சிப் பொறுப்பேற்று மக்களுடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாமல் குறுகிய காலத்திலேயே மக்களுடைய அதிருப்தியைப் பெற்றிருக்கிற திமுக அரசு, மக்களின் கவனத்தைத் திசை திருப்பி வருகிறது.

அதிமுகவை அழித்து விடலாம், ஒழித்து விடலாம் என்று கனவு கண்டால் அது பகல் கனவாகவே முடியும் என்ற வரலாறு திமுக தலைவர் ஸ்டாலினுக்குத் தெரியும். அதிமுக இதுபோன்ற அடக்குமுறைகளை எல்லாம் தாங்கி வலுப்பெற்ற இயக்கம் என்பதை திமுக தலைவர் ஸ்டாலின் போன்றவர் அறிவர்.

எனவே, காழ்ப்புணர்ச்சியோடு காவல்துறை மூலம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது காவல்துறையை ஏவிவிட்டு அவரது இல்லத்தில் சோதனை என்ற பெயரில், அச்சுறுத்த நினைக்கும் திமுக அரசுக்கு எங்களுடைய கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு அதிமுக உறுதுணையாக இருக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்வதோடு, ஸ்டாலின் அரசினுடைய இந்த அத்துமீறல்களை , தொண்டர்களின் துணையோடு, சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்வோம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

-பிரியா

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் ...

8 நிமிட வாசிப்பு

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் சர்ச்சையில் பிடிஆர்

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை! ...

4 நிமிட வாசிப்பு

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை!

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்! ...

13 நிமிட வாசிப்பு

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்!

வியாழன் 22 ஜூலை 2021