மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 22 ஜூலை 2021

தூத்துக்குடி பனிமய மாதா திருவிழா: அமைச்சர் அறிவிப்பு!

தூத்துக்குடி பனிமய மாதா திருவிழா: அமைச்சர் அறிவிப்பு!

தூத்துக்குடி தூய பனிமய மாதா திருவிழா வரும் 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் என்று சமூக நலத் துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயம் உலகப் பிரசித்தி பெற்றது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை 11 நாட்கள் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இதற்கு வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களிலிருந்து மக்கள் வருவார்கள். உலகிலேயே மதியம் மறையுரை நடக்கக்கூடிய ஒரே ஆலயம், இந்த பனிமய பேராலயம் மட்டும்தான்.அதுபோன்று, மற்ற ஆலயங்களில் தினமும் ஒரே திருப்பலி மட்டும்தான் நடக்கும். ஆனால், ஆசியாவிலேயே இங்கு மட்டும்தான் தினமும் 8 திருப்பலிகள் நடக்கிறது.

இந்நிலையில், பனிமயமாதா திருவிழா ஏற்பாடுகள் தொடர்பாக இன்று(ஜூலை 22) நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் சமூக நலத் துறை அமைச்சர் கீதா ஜீவன், பேராலய தலைவர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், ஒவ்வொரு ஆண்டும் பனிமய மாதா திருவிழா கோலாகலமாக நடைபெறும். இதற்கு உலகளவில் இருந்தும் மக்கள் வருவார்கள். கொடியேற்றத்துக்கு மட்டுமே லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள். கொரோனா காரணமாக இந்த திருவிழாவில் மக்கள் கலந்து கொள்ள இயலவில்லை. இந்தாண்டும் ஊரடங்கு அமலில் இருந்தாலும், வழிபாட்டு தலங்களில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால், பனிமய மாதா திருவிழா அரசின் வழிகாட்டுதலின்படி மக்கள் பங்கேற்பின்றி ஆராதனை நிகழ்வுகள் நடைபெறும். பனிமய மாதா பேராலயத்தில் 439வது திருவிழா கொடியேற்றத்துடன் 26ஆம் தேதி தொடங்குகிறது. ஆகஸ்ட் 5ஆம் தேதிவரை திருவிழா நடைபெறும். திருவிழா நிகழ்வுகள் தொலைக்காட்சி மற்றும் யூடியூப் சேனலில் நேரலையாக ஒளிபரப்பப்படும்” என்று தெரிவித்தார்.

இதையடுத்து பேசிய பேராலய தலைவர், “கொரோனா ஊரடங்கு காரணமாக அரசின் அறிவுறுத்தலின்படி, கொடிபவனி, திருவிருந்து விழா, நற்கருனை பவனி, சப்பரப் பவனி ஆகியவை நடைபெறாது. திருவிழா காலத்தில் பேராலயத்தில் அமைக்கப்படும் கடைகளும், பொருள் காட்சியும் நடைபெறாது. விழாவில் கலந்து கொள்பவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்” என்று தெரிவித்தார்.

கடந்தாண்டும் கொரோனா காரணமாக பனிமயமாதா திருவிழா மக்கள் பங்கேற்பின்றி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

கிஷ்கிந்தாவின் 177 ஏக்கர் கோயில் நிலம்: சேகர்பாபு

4 நிமிட வாசிப்பு

கிஷ்கிந்தாவின் 177 ஏக்கர்  கோயில் நிலம்: சேகர்பாபு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் கண்டனம்!

4 நிமிட வாசிப்பு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் கண்டனம்!

உள்ளாட்சித் தேர்தல்: மேல்மருவத்தூரில் ஆன்மீக அரசியல்-பின்னணி! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: மேல்மருவத்தூரில் ஆன்மீக அரசியல்-பின்னணி!

வியாழன் 22 ஜூலை 2021