மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 21 ஜூலை 2021

மருந்தாளுநர் பணிக்கு பி.பார்ம் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்: அன்புமணி வரவேற்பு!

மருந்தாளுநர் பணிக்கு பி.பார்ம் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்: அன்புமணி வரவேற்பு!

மருத்துவமனைகளில் மருந்தாளுநர் பணிக்கு பி.பார்ம் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பை, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வரவேற்றுள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுநர் பணிக்கு டி.பார்ம் படித்தவர்கள் மட்டுமில்லாமல், பி.பார்ம் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவிக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியிருந்தார். இந்த கோரிக்கையை ஏற்ற, தமிழ்நாடு அரசு, மருந்தாளுநர் பணிக்கு பி.பார்ம் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என நேற்று (ஜூலை 20) அறிவித்தது.

இந்த அறிவிப்புக்கு வரவேற்பு அளிக்கும் வகையில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ட்விட்டரில் இன்று(ஜூலை 21), தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுநர் பணிக்கு பி.பார்ம் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

மருந்தாளுநர் பணிக்கு பி.பார்ம் படித்தவர்களையும் பரிசீலிக்க வேண்டும் என்று கடந்த 11ஆம் தேதி நான் வெளியிட்டிருந்த அறிக்கையை ஏற்று, தமிழ்நாடு அரசு இந்த அறிவிக்கையை வெளியிட்டிருக்கிறது. இதன் மூலம் மிகப்பெரிய அநீதி களையப்பட்டிருக்கிறது.

மருந்தாளுநர் பணிக்கான கல்வித் தகுதியில் செய்யப்பட்டுள்ள மாற்றத்தால், வேறு அரசுப் பணி வாய்ப்பு இல்லாத பல்லாயிரக்கணக்கான பி.பார்ம் பட்டதாரிகள் பயனடைவார்கள். அவர்கள் வாழ்வில் புதிய வெளிச்சம் பரவட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

-வினிதா

கிஷ்கிந்தாவின் 177 ஏக்கர் கோயில் நிலம்: சேகர்பாபு

4 நிமிட வாசிப்பு

கிஷ்கிந்தாவின் 177 ஏக்கர்  கோயில் நிலம்: சேகர்பாபு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் கண்டனம்!

4 நிமிட வாசிப்பு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் கண்டனம்!

உள்ளாட்சித் தேர்தல்: மேல்மருவத்தூரில் ஆன்மீக அரசியல்-பின்னணி! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: மேல்மருவத்தூரில் ஆன்மீக அரசியல்-பின்னணி!

புதன் 21 ஜூலை 2021