மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 20 ஜூலை 2021

ராகுல் கணக்கை ஹேக் செய்வது வீண்: குஷ்பு

ராகுல் கணக்கை ஹேக் செய்வது வீண்: குஷ்பு

ராகுல் காந்தி அக்கவுண்டை ஹேக் பண்றது வீணானது என்று பாஜக நிர்வாகி குஷ்பு தெரிவித்துள்ளார். 

நடிகையும், பாஜக நிர்வாகியுமானகுஷ்புவின் ட்விட்டர் அக்கவுண்டை மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ளனர். அவரின் ட்வீட்களைஅழித்ததுடன், ட்விட்டர் அக்கவுண்ட் பெயர் மற்றும் முகப்பு படமும் மாற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து இன்று(ஜூலை20) சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் டிஜிபி சைலேந்திரபாபுவை நேரில் சந்தித்து புகார் அளித்த குஷ்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், “மூன்று நாட்களுக்கு முன்பே என் ட்விட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளது. டெல்லி சென்று வந்த பின்னர் என்னால் ட்விட்டரை பயன்படுத்த முடியவில்லை. ட்விட்டரில் என் மெயில் ஐடி ஏற்றுக் கொள்ளபடாதுஎன தகவல் வந்ததும் சந்தேகமடைந்தேன். மறுநாள், என்னுடைய ட்விட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டது உறுதியானது.

அக்கவுண்ட் க்ளோல் பண்றது வேறு; முடக்கப்பட்டது என்பது வேறு. கடைசி முறை என்னுடைய க்ளோஸ் பண்ணப்பட்டது. தற்போது ஹேக் செய்யப்பட்டுள்ளது.  ஹேக் பண்ணதால்தான்ரொம்ப பயமாக இருக்கிறது. அந்த பயம், எனது கணக்கை தவறாக பயன்படுத்திவிடக் கூடாது என்பதுதான்.நேற்றிரவு கூட free India என்று இரண்டு,மூன்று ட்வீட்கள் தேவையில்லாமல் பதிவிடப்பட்டிருந்தது. பெகாசஸ் மூலம் ட்விட்டர் கணக்கை ஹேக் செய்ய முடியாது. ராகுல்காந்தி அவருடைய அக்கவுண்டை ஹேக் செய்ததாக கூறுகிறார்கள். இதன்மூலம் பிஜேபிக்கு எந்த லாபமும் கிடையாது, சொல்லபோனால் ஹேக் பண்றது வேஸ்ட்” என்று கூறினார். 

தொடர்ந்துபேசியவர்,” நான் ஒன்றிய அமைச்சரவை பட்டியலை சொல்லவில்லை. ஆளுநர்கள் பட்டியலில் ஒருபெண் கூட இடம்பெறவில்லை என்பதைதான் சொன்னேன். இப்போதுதான் கட்சிக்கு வந்துள்ளேன். அதற்குள்எப்படி ஆளுநராக முடியும், அந்தளவுக்கு எனக்கு இன்னும் வயசு ஆகவில்லை. தமிழ்நாடு பாஜகதலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளது ரொம்ப சந்தோஷம். சட்டம் தெரிந்த, முன்நின்றுபேசக்கூடிய, எல்லாரிடமும் சகஜமாக பேசக் கூடிய ஒருவருக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது” என்று கூறினார்.  

-வினிதா

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த ‘விஷய’ பாஸ்கர்!

8 நிமிட வாசிப்பு

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த  ‘விஷய’ பாஸ்கர்!

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

2 நிமிட வாசிப்பு

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

8 நிமிட வாசிப்பு

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

செவ்வாய் 20 ஜூலை 2021