மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 20 ஜூலை 2021

குஷ்புவின் ட்விட்டர் கணக்கு முடக்கம்: ட்வீட்கள் அழிப்பு!

குஷ்புவின் ட்விட்டர் கணக்கு முடக்கம்: ட்வீட்கள் அழிப்பு!

நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்புவின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டு அனைத்து பதிவுகளும் அழிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக பிரபலங்களின் ட்விட்டர் பக்கங்கள் ஹேக் செய்யப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. அந்த வகையில் குஷ்புவின் ட்விட்டர் பக்கமும் மர்ம நபர்களால் முடக்கப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது.

நடிகை குஷ்பு எப்போதுமே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர். பல சமயங்களில் இவர் பதிவிடும் கருத்துக்கள் பேசும் பொருளாகவும், விவாதமாகவும் மாறியிருக்கிறது. இந்த சூழலில் குஷ்புவின் ட்விட்டர் ஐடி ஹேக் செய்யப்பட்டு, அவர் பதிவிட்ட 1 லட்சத்து 59 ஆயிரம் ட்வீட்களும் மொத்தமாக அழிந்துள்ளன. அவருடைய முகப்பு பக்கத்தின் படமும் மாறியுள்ளது. அவரது பெயருக்கு பதிலாக Briann என்ற பெயர் இருக்கிறது. ஆனால் அவரின் username ஆன @khushsundar மட்டும் மாறாமல் இருக்கிறது. அதன் பிறகு எந்த பின்னூட்டமும் இல்லை. குஷ்புவை 13 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். இவர் 710 பேரை பின்தொடர்கிறார்.

தற்போது, குஷ்புவின் ட்விட்டர் பக்கத்தை மீட்க தொழில்நுட்ப வல்லுநர்கள் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.

இதற்கு நெட்டிசன்கள் பலரும் பலவிதமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த ஹேக்கிங் வேலையே அவரே பார்த்து இருக்கலாம் என்றும், ’அவரே ஸ்கெட்ச் போட்டு பண்ணிருக்கலாம். பாஜகவை விமர்சித்த பழைய ட்வீட்களை நோண்டியெடுத்து கலாய்க்கிறாங்கன்னு ஹேக் பண்ற மாறி எல்லா ட்வீட்டும் டெலிட் பண்ணிருக்கலாம்’’ என்று கருத்து கூறுகின்றனர்.

இன்னும் சிலர், “பாஜக ஆளுங்களா தான் இருக்கும், பதவி, பொறுப்பு கேட்டு இப்போ தான் டெல்லி போயிட்டு வந்தாங்க, அதன் எதிரொலிப்பு இப்படி இருக்கலாம்” என்று கூறுகின்றனர்.

ஏற்கனவே கடந்த 2020ஆம் ஆண்டிலும் குஷ்புவின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து விளக்கமளித்து குஷ்பு ”என்னுடைய ட்விட்டர் கணக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக முடக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக ட்விட்டர் நிர்வாக அலுவலகத்துடன் தொடர்பில் இருக்கிறோம். கடந்த மூன்று நாட்களாக என்னுடைய ட்விட்டரில் பதிவுகள் எதுவும் செய்யப்பட்டால், அது என்னுடையது அல்ல” என்று தெரிவித்துள்ளார்.

-வினிதா

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. ...

6 நிமிட வாசிப்பு

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. தர்ணா!

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

5 நிமிட வாசிப்பு

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

3 நிமிட வாசிப்பு

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

செவ்வாய் 20 ஜூலை 2021