மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 20 ஜூலை 2021

7.5% இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு: வழக்கை விசாரிக்க மறுப்பு!

7.5% இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு: வழக்கை விசாரிக்க மறுப்பு!

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5%த இட ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று (ஜூலை 20) தள்ளுபடி செய்தது.

தமிழகத்தில் நீட் தேர்வு காரணமாக அரசுப் பள்ளி மற்றும் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகக் கடந்த அதிமுக ஆட்சியில், 7.5% இட ஒதுக்கீடு சட்டம் கொண்டு வரப்பட்டது.

இச்சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில் கடந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் பயின்ற 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்தனர். அப்போது அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் மருத்துவப் படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று புதுக்கோட்டையைச் சேர்ந்த ராஜஸ்ரீ என்ற மாணவி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அதில் பதினோராம் வகுப்பு வரை தனியார் பள்ளியில் படித்த நான் 12ஆம் வகுப்பில் மட்டும் அரசுப் பள்ளியில் படித்து உள்ளேன். ஆனால் அரசு கொண்டுவந்த 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்பில் சேர எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த இட ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

இவ்வழக்கு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வராவ் மற்றும் அனுருத்தா போஸ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இவ்வழக்கை விசாரிக்க மறுப்பு தெரிவித்து, 7.5% உள் ஒதுக்கீடு வழங்குவது என்பது மாநில அரசின் கொள்கை சார்ந்தது. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது" என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், இதுதொடர்பாக மாணவி ராஜஸ்ரீ உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யுமாறு அறிவுறுத்தி மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

7.5% இட ஒதுக்கீட்டைக் கடந்த ஆண்டே அமல்படுத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், “அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கும், அரசாணை பிறப்பித்த தமிழக அரசுக்கும் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்தது” என்பது குறிப்பிடத்தக்கது.

-பிரியா

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த ‘விஷய’ பாஸ்கர்!

8 நிமிட வாசிப்பு

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த  ‘விஷய’ பாஸ்கர்!

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

2 நிமிட வாசிப்பு

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

8 நிமிட வாசிப்பு

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

செவ்வாய் 20 ஜூலை 2021