மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 20 ஜூலை 2021

வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்ட சிலைகள் விரைவில் மீட்பு!

வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்ட சிலைகள் விரைவில் மீட்பு!

தமிழ்நாட்டு கோயில்களில் இருந்து திருடப்பட்டு, வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்ட சிலைகள் விரைவில் மீட்கப்படும் என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே உள்ள புதிய எருமைவெட்டிபாளையத்தில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோதண்டராமர் கோயில், வரமூத்தீஸ்வரர் கோயில் மற்றும் அங்காள பரமேஸ்வரி கோயில், சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி ஆகிய கோயில்களில் அமைச்சர் சேகர்பாபு நேற்று (ஜூலை 19) திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கோயில்களில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்தும், கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், "திருடப்பட்ட சிலைகள் வெளிநாடுகளில் இரண்டு, மூன்று இடங்களில் இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. அவற்றை மீட்டு வரவும், ஏற்கனவே சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விரைந்து முடிக்கவும், ஏடிஜிபி மற்றும் துறை எஸ்பி ஆகியோரோடு இந்து அறநிலையத்துறை ஆலோசனை செய்துள்ளது. இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற 70 நாட்களில் ஆக்கிரமிப்பில் இருந்த 600 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது எந்தவித பாகுபாடுமின்றி வெளிப்படை தன்மையுடன் நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களை புனரமைக்க 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கோயில் பராமரிப்பு, சொத்துகளை பாதுகாத்தல் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அவரது ஆலோசனையின்படி இந்து அறநிலையத்துறையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

கோயில்களில் திருவிழாக்கள், பூஜைகள், யாகங்கள் உள்ளிட்ட உற்சவங்கள் நடத்துவதற்கான தடை வரும் 31ஆம் தேதி வரை நீடிக்கிறது.

ஜூலை 31ஆம் தேதிக்கு பிறகு, முதல்வர் அறிவிக்கும் தளர்வுகளை பொறுத்து, திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆடிக் கிருத்திகை, பெரியபாளையம் பவானியம்மன் ஆடி மாத திருவிழாக்கள் நடத்துவது தொடர்பாக உரிய முடிவு எடுக்கப்படும்.

கோயில்களுக்கு சொந்தமான 30 யானைகள் உள்ளன. இந்த யானைகளுக்கு மாதம் இரண்டு முறை மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அர்ச்சகர் இல்லாத அனைத்து கோயில்களுக்கு அர்ச்சகர்கள் மற்றும் காவலாளிகள் விரைவில் நியமிக்கப்படுவார்கள்” என்று தெரிவித்தார்.

-வினிதா

கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் ...

12 நிமிட வாசிப்பு

கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் உத்தரவு!

பிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு!

3 நிமிட வாசிப்பு

பிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு!

முதல்வர் வழியில் எழுக பி.டி.ஆர்!

7 நிமிட வாசிப்பு

முதல்வர் வழியில் எழுக பி.டி.ஆர்!

செவ்வாய் 20 ஜூலை 2021