மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 18 ஜூலை 2021

சிபிஎஸ்இ முடிவு வந்த பிறகு பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை!

சிபிஎஸ்இ முடிவு வந்த பிறகு பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை!

சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவு வந்ததும் பொறியியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்படும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தேர்வு நடத்தப்படாமல் பிளஸ் 2 மாணவர்களுக்கு முதன்முறையாக முந்தைய மதிப்பெண்களின் அடிப்படையில் முடிவுகள் வெளியிடப்படவுள்ளன. தேர்வு முடிவுகள் எவ்வாறு வெளியிடப்படும் என்று ஏற்கனவே பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது. அந்த அடிப்படையில் தங்களது மதிப்பெண்களை மாணவர்களே கணக்கிட்டு வைத்துள்ளனர். எந்த கல்லூரியில் சேரலாம் என நாளை வெளியிடப்படவுள்ள தேர்வு முடிவை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் மாணவர்களின் கல்லூரிச் சேர்க்கை குறித்து உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறுகையில், “சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளிவந்த பின், கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கும் ” என்று தெரிவித்தார். நாளை முடிவு வந்த பிறகு கல்லூரியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.

சென்னை எத்திராஜ் கல்லூரியில் இன்று (ஜூலை 18) நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.

-பிரியா

கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் ...

12 நிமிட வாசிப்பு

கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் உத்தரவு!

பிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு!

3 நிமிட வாசிப்பு

பிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு!

முதல்வர் வழியில் எழுக பி.டி.ஆர்!

7 நிமிட வாசிப்பு

முதல்வர் வழியில் எழுக பி.டி.ஆர்!

ஞாயிறு 18 ஜூலை 2021