மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 18 ஜூலை 2021

கொள்முதல் நிலையங்களில் நிரந்தர கட்டுமானங்கள்: நீதிமன்றம் யோசனை!

கொள்முதல் நிலையங்களில் நிரந்தர கட்டுமானங்கள்: நீதிமன்றம் யோசனை!

மழையால் விளைபொருட்கள் வீணாவதைத் தடுக்கும் வகையில் நேரடிக் கொள்முதல் நிலையங்களில் நிரந்தர கட்டுமானங்களை அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் யோசனை வழங்கியுள்ளது.

தென்மாவட்டங்களில் மழையின் காரணமாக விளைபொருட்கள் நனைந்து வீணாவது குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது.

இந்த வழக்கில், 'அதிகளவு சாகுபடி நடக்கும் பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் மையங்கள் தொடங்குவது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்' என்று தமிழக அரசுக்குத் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டிருந்தது.

இவ்வழக்கில் தமிழக அரசின் வேளாண் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், நெல் கொள்முதலுக்காக 468 குடோன்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 3,34,000 டன் நெல்லை பாதுகாக்க முடியும். இதுதவிர விளைநிலங்களுக்குச் சென்று வேன் மூலம் நெல் கொள்முதல் செய்யும் வகையில் நடமாடும் கொள்முதல் நிலையங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் பருவம் தவறிப் பெய்யும் மழையில் விளைபொருட்கள் வீணாகாமல் பாதுகாக்க நேரடிக் கொள்முதல் நிலையங்களில் நிரந்தர கட்டுமானங்களை அமைக்கலாம் என்று ஆலோசனை கூறி இவ்வழக்கை முடித்து வைத்தனர்.

-பிரியா

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான ...

7 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான அதிரடி!

மின்னம்பலம் செய்தி எதிரொலி: அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் ...

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி எதிரொலி:  அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் அறிவுறுத்தல்!

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

5 நிமிட வாசிப்பு

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

ஞாயிறு 18 ஜூலை 2021