மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 16 ஜூலை 2021

ஊடகங்களை மிரட்டினேனா?அண்ணாமலை விளக்கம்!

ஊடகங்களை மிரட்டினேனா?அண்ணாமலை விளக்கம்!

ஊடகங்களை தான் மிரட்டவில்லை என்றும் தான் பேசியதன் பொருள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருப்பதாகவும் தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை கூறியுள்ளார்.

கோவை முதல் சென்னை கமலாலயத்துக்கு பயணமாக புறப்பட்ட அண்ணாமலை ராசிபுரத்தில் பேசும்போது, “இந்த மீடியாவை நீங்கள் மறந்துவிடுங்கள். நம்மளைப் பத்தி பொய்யா செய்தி போடறாங்க, என்ன பண்ணலாம்.அதெல்லாம் நீங்க மறந்துடுங்க. அடுத்த ஒரு ஆறு மாதத்துக்குள் நீங்க பார்ப்பிங்க. அந்த மீடியாவை நாம் கன்ட்ரோல் பண்ணலாம், கையிலெடுக்கலாம். அதப் பத்தி நீங்க ஒரி பண்ணிக்காதீங்க. காரணம் என்னவென்றால், தொடர்ந்து பொய்யான விஷயங்களை எந்த ஒரு ஊடகமும் சொல்ல முடியாது. இத்தனைக்கும் இதற்கு முன் மாநிலத் தலைவராக இருந்த முருகன் ஐயா அவர்கள், செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சராக இருக்கிறார். எல்லா ஊடகங்களும் அவருக்குக் கீழேதான் வரப் போகுது. ஏனென்றால் தொடர்ந்து தப்புகள் நடக்க முடியாது. தப்பான ஒரு செய்தியைத் தொடர்ந்து செய்யமுடியாது. அதை வைத்து அரசியல் செய்ய முடியாது நிச்சயம் உடைப்போம்”என்று பேசினார். அண்ணாமலை ஊடகங்களை மிரட்டுகிறார் என்று இது சர்ச்சைக்குள்ளானது.

இந்நிலையில் தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசினார் அண்ணாமலை. அப்போது அவர்,

“நான் ராசிபுரத்தில் பேசும்போது பேசியதைக் கேட்டு மீடியா நண்பர்கள் பலர் என்னிடம் பேசினார்கள். நான் அந்தக் கூட்டத்திலே பேசும்போது மத்திய அரசின் புதிய ஐடி விதிமுறைகள் வந்திருக்கும் நிலையில் மீடியா எத்திக்ஸ் கோட் பற்றி பேசினேன். அந்த எத்திக்ஸ் கோட் வந்தபிறகு ஆன் லைனிலே யார் யார் நியூஸ் போடுகிறார்களோ அவர்களுக்கு ஒரு செக் ஆக அமையும்.

உங்களைப் போல ட்ரெடிஷனல் மீடியாக்களுக்கு எடிட்டர்கள் இருக்கிறார்கள், சிஸ்டம் இருக்கிறது. ஒரு செய்தி வெளியிடும்போது அது உண்மையாக இருக்கிறதா என்று செக் செய்கிறீர்கள். அந்த எத்திக்ஸ் கோட் வந்தபிறகு தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என்று யாரெல்லாம் ஆன்லைனில் நியூஸ்போடுகிறார்களோ அது மிகப்பெரிய கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வரும். தமிழக ஊடகம் மீதும், இந்திய ஊடகம் மீதும் பாஜக பெரிய மதிப்பு வைத்திருக்கிறது. தவறு நடக்கும்போது தட்டிக் கேட்கும் மீடியாக்கள் தொடர வேண்டும். நீங்கள் அதைத் தொடர்ந்து செய்யுங்கள்” என்று விளக்கம் அளித்தார்.

-வேந்தன்

கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் ...

12 நிமிட வாசிப்பு

கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் உத்தரவு!

பிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு!

3 நிமிட வாசிப்பு

பிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு!

முதல்வர் வழியில் எழுக பி.டி.ஆர்!

7 நிமிட வாசிப்பு

முதல்வர் வழியில் எழுக பி.டி.ஆர்!

வெள்ளி 16 ஜூலை 2021