மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 16 ஜூலை 2021

’உங்கள் தொகுதியில் முதல்வர்’: 1.76 லட்சம் மனுக்கள் ஏற்பு!

’உங்கள் தொகுதியில் முதல்வர்’: 1.76 லட்சம் மனுக்கள் ஏற்பு!

’உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ துறை தொடங்கப்பட்ட 70 நாள்களில், இதுவரை ஒரு லட்சத்து 76 ஆயிரம் மனுக்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளன என தமிழ்நாடு அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பரப்புரையில் வாக்குறுதி அளித்தப்படி, ஆட்சிக்கு வந்ததும் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற தனிப்பிரிவு தொடங்கப்பட்டு, அதற்கென சிறப்பு அதிகாரி நியமனம் செய்யப்பட்டு,மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை16) ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் 13 பயனாளிகளுக்கு, நலத்திட்ட உதவிகளுக்கான ஆணைகளை வழங்கினார்.

இத்திட்டத்தின் கீழ் தீர்வு காணப்பட்ட மனுக்களில், தெரிவு செய்யப்பட்ட சில பயனாளிகளுக்கு முதல்வரால் இதுவரை நான்கு முறை நலத்திட்ட உதவிகளுக்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதுவரை 3,51,486 மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அவற்றில் 1,76,268 கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

வருவாய் துறையின் மூலம் தனிநபர் கோரிக்கைகளான பட்டா, சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஓய்வூதியங்கள், இதர நலத்திட்ட உதவிகளைக் கோரி பெறப்பட்ட 52,434 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் வீடு கட்ட மற்றும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் கோரி பெறப்பட்ட 35,670 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் கோரி பெறப்பட்ட 6,548 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை தொடர்பான 3,909 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் தொடர்பான 1,889 மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளன. உள்துறையின் மூலம் 1,162 மனுக்களுக்கும், இதர துறைகள்மூலம் 74,656 மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளன.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின்கீழ் பெறப்பட்ட 2,100 மனுக்களில், 986 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. அவற்றில் இரண்டு மாற்றுத்திறனாளிப் பயனாளிகள் இன்று முதல்வரிடமிருந்து நேரில் நலத்திட்ட உதவியினைப் பெற்றனர்.

'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' துறை தொடங்கப்பட்ட கடந்த 70 நாட்களில், இதுவரை 1.76 லட்சம் மனுக்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் முதல்வரின் தனிப் பிரிவில் பெறப்பட்டு, தீர்வு காணப்பட்ட மனுக்களின் ஆண்டு சராசரி எண்ணிக்கையான 1 லட்சத்து 10 ஆயிரத்தைவிடக் கூடுதலாகும். மீதமுள்ள மனுக்களுக்கும் அடுத்த 30 நாட்களில் தீர்வு காண இத்துறை முனைப்புடன் செயல்பட முதல்வர் கேட்டுக் கொண்டார்.

இத்திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று பொதுமக்கள் பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற இணையத்தில் பதிவு செய்த, தனது கோரிக்கைக்கு சில மணி நேரத்தில் நடவடிக்கை எடுத்ததற்கு கோவையைச் சேர்ந்த பொறியாளர் மோகன் குமார் கடிதம் மூலம் நன்றி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

6 நிமிட வாசிப்பு

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

4 நிமிட வாசிப்பு

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

வெள்ளி 16 ஜூலை 2021