மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 16 ஜூலை 2021

மூன்றாவது அலை-எச்சரிக்கையாக இருங்கள் : தமிழிசை செளந்தரராஜன்

மூன்றாவது அலை-எச்சரிக்கையாக இருங்கள் : தமிழிசை செளந்தரராஜன்

ஆகஸ்ட் 15 ஆம் தேதி தேசியக் கொடி ஏற்றும் போது, கொரோனா இறக்கப்பட்டிருக்க வேண்டும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தற்போதுதான், கொரோனா இரண்டாம் அலை படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில், மூன்றாவது அலை குறித்து மருத்துவர்களின் தொடர் எச்சரிக்கை பயத்தை அதிகமாக்குகிறது. மூன்றாம் அலையின் தொடக்கத்தில் இருக்கிறோம். டெல்டா வைரஸ் பரவல் காரணமாக உலக அளவில் கொரோனா தொற்றும், உயிரிழப்பும் அதிகரித்துள்ளன. டெல்டா வைரஸ் தற்போது உலகில் 111 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த நான்கு வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விட்டிருந்தது. இருப்பினும் இரண்டாவது அலையில் ஏற்பட்ட பாதிப்பு போன்று, மூன்றாவது அலையில் ஏற்படாது என்றும் கூறப்படுகிறது.

மூன்றாம் அலை வந்துவிட்டதோ என்று சந்தேகப்படும் படியாக சில சம்பவங்களும் நடந்து வருகின்றன. புதுச்சேரி இந்திரா அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். 21 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், இன்று(ஜூலை 16) செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், “ ஏற்கனவே குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதுபோன்றுதான் தற்போதும் ஏற்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு சிகிச்சை பிரிவு, ஆக்சிஜன் ஏற்பாடு ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா மூன்றாம் அலை வராது என்று கூற முடியாது. ஒருவேளை மூன்றாவது அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டால், அதனை எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எந்த நேரத்திலும் மூன்றாவது அலை தாக்கப்படலாம் என்பதால், அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புதுச்சேரியில் ஆகஸ்ட் 15ஆம் தேதி தேசியக் கொடி ஏற்றும்போது, கொரோனா பாதிப்பு இறக்கப்பட்டிருக்க வேண்டும்” என்று கூறினார்.

-வினிதா

ஒரே மேடையில் அதிமுக - அமமுக: ஜெயலலிதா ‘நடத்தி வைத்த’ புதுமை!

8 நிமிட வாசிப்பு

ஒரே மேடையில் அதிமுக - அமமுக: ஜெயலலிதா ‘நடத்தி வைத்த’ புதுமை!

நிர்மலாவுடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு: கவனிக்கும் திமுக ...

12 நிமிட வாசிப்பு

நிர்மலாவுடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு: கவனிக்கும் திமுக தலைமை!

அதிமுக தேர்தல்: திடீர் திருப்பம் ஏற்படுமா?

5 நிமிட வாசிப்பு

அதிமுக தேர்தல்: திடீர் திருப்பம் ஏற்படுமா?

வெள்ளி 16 ஜூலை 2021