மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 16 ஜூலை 2021

பள்ளிகள் திறக்கப்படுமா? முதல்வர் ஆலோசனை!

பள்ளிகள்  திறக்கப்படுமா? முதல்வர் ஆலோசனை!

தமிழகத்தில் ஊரடங்கு ஜூலை 19ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் கூடுதல் தளர்வுகளை வழங்குவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூலை 16) ஆலோசனை நடத்த உள்ளார்.

கொரோனா இரண்டாம் அலை படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில் ஊரடங்கில் தமிழக அரசு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் பள்ளி கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர் மத்தியிலும் இருந்து வருகிறது.

இதுகுறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை மற்றும் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் என்று தெரிவித்தார். நேரடி வகுப்பு தொடங்குவது குறித்து முதல்வர் அறிவிப்பார் என்றார்.

அதுபோன்று, பள்ளிகள் திறப்பது குறித்து அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனை நடந்து வருகிறது. இந்த ஆலோசனையின் முடிவு முதல்வரிடம் எடுத்துச் செல்லப்படும், அவர் பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிப்பார் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

மேலும், தியேட்டர்கள் திறக்கப்படுமா என திரைத் துறையினரும் காத்திருக்கின்றனர்.

தற்போது தமிழகத்தில் தினசரி பாதிப்பு 2500க்கும் குறைவாக உள்ளது. நேற்று 2405 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 49 பேர் உயிரிழந்துள்ளனர். 30க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 100க்கும் கீழ் பாதிப்பு குறைந்துள்ளது. கோவை, சென்னை, ஈரோடு, சேலம், தஞ்சாவூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மட்டும் பாதிப்பு 100க்கும் அதிகமாக உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளை அறிவிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தவுள்ளார். இதில், சுகாதாரத் துறை, கல்வித் துறையைச் சேர்ந்த அதிகாரிகள், தலைமை செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் முதல் கட்டமாக ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்காகப் பள்ளிகளைத் திறக்கலாமா என்பது பற்றியும், கல்லூரிகள் திறப்பு குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது. அதுபோன்று பள்ளிகள் திறப்பு மற்றும் மாணவர் சேர்க்கை தொடர்பாக இன்று மாலை மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

-பிரியா

கிஷ்கிந்தாவின் 177 ஏக்கர் கோயில் நிலம்: சேகர்பாபு

4 நிமிட வாசிப்பு

கிஷ்கிந்தாவின் 177 ஏக்கர்  கோயில் நிலம்: சேகர்பாபு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் கண்டனம்!

4 நிமிட வாசிப்பு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் கண்டனம்!

உள்ளாட்சித் தேர்தல்: மேல்மருவத்தூரில் ஆன்மீக அரசியல்-பின்னணி! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: மேல்மருவத்தூரில் ஆன்மீக அரசியல்-பின்னணி!

வெள்ளி 16 ஜூலை 2021