மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 16 ஜூலை 2021

2,500 பேருந்துகளில் சிசிடிவி கேமரா: அமைச்சர் தகவல்!

2,500 பேருந்துகளில் சிசிடிவி கேமரா: அமைச்சர் தகவல்!

நிர்பயா திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக சென்னையில் 2,500 பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

நேற்று (ஜூலை 15) சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், “கடந்த மே 8 முதல் நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொண்டு வந்தாலும், ஜூலை 12ஆம் தேதி முதல்தான் பெண்களுக்கு இலவச டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 12ஆம் தேதி முதல் தற்போதுவரை 78 லட்சம் பெண்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் 7,222 நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நேற்று முன்தினம் (ஜூலை 14) மட்டும் 28 லட்சம் பெண்கள் பயணம் செய்துள்ளனர். தமிழ்நாட்டில் மொத்த பயணம் செய்பவர்களில் 56% பெண்கள்தான். தற்போதுவரை 5,741 திருநங்கைகள், 51,615 மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களுடைய உதவியாளர்கள் 8,396 பேரும் இலவசமாகப் பயணம் செய்துள்ளனர்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “இலவச பயணத்திட்டம் பெண்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பெண் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க பேருந்துகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும்.

புதுச்சேரிக்கு பேருந்துகள் இயக்க ஆரம்பித்த நாளிலிருந்து இதுவரை 364 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக பேருந்து இயங்காமல் இருந்த செங்கல்பட்டு மாவட்டம் பழவேலி எனும் கிராமத்தில் முதல்வரின் உத்தரவின்படி, நேற்று முன்தினம் மதியத்திலிருந்தே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. நிறுத்தப்பட்ட பேருந்து சேவைகள் படிப்படியாக மீண்டும் இயக்கப்படும். இது தொடர்பாக பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

பெண்களின் பாதுகாப்புக்காக நிர்பயா திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக சென்னையில் 2,500 பேருந்துகளில் 71 ரூபாய் கோடி செலவில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் நடைமுறைக்கு வரும்” என்று தெரிவித்தார்.

-வினிதா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

வெள்ளி 16 ஜூலை 2021