மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 15 ஜூலை 2021

குளத்தில் மூழ்கி உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம்!

குளத்தில் மூழ்கி உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம்!

திருவள்ளூர் அருகே கோயில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த 5 பேர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த புது கும்மிடிப்பூண்டி கரும்பு குப்பம் சீதாம்பாள் தெருவைச் சேர்ந்த 3 சிறுமிகள், 2 பெண்கள் நேற்று (ஜூலை 14) அங்குள்ள அங்களாம்மன் கோயில் குளத்தில் துணி துவைக்க சென்றுள்ளனர்.

சிறுமிகள் மூவரும் குளித்துக் கொண்டிருந்தபோது நர்மதா என்ற சிறுமி நீரில் மூழ்கியுள்ளார். அவரை காப்பாற்றுவதற்காக நீரில் இறங்கிய அனைவரும் அடுத்தடுத்து நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், தீயணைப்புத்துறையினர் குளத்தில் மூழ்கி உயிரிழந்த 5 பேரின் உடலை மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்தவர்கள் குணசேகரன் என்பவரின் மகள் நர்மதா (12), ராஜ் என்பவரின் மனைவி சுமதி (35) மற்றும் அவரது மகள் அஸ்விதா (14), முனுசாமி என்பவரின் மனைவி ஜோதி (38), தேவேந்திரன் என்பவரின் மகள் ஜீவிதா (14) என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஒரே பகுதியைச் சேர்ந்த 5 பேர் கோயில் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில், குளத்தில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.5 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.

-வினிதா

கிஷ்கிந்தாவின் 177 ஏக்கர் கோயில் நிலம்: சேகர்பாபு

4 நிமிட வாசிப்பு

கிஷ்கிந்தாவின் 177 ஏக்கர்  கோயில் நிலம்: சேகர்பாபு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் கண்டனம்!

4 நிமிட வாசிப்பு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் கண்டனம்!

உள்ளாட்சித் தேர்தல்: மேல்மருவத்தூரில் ஆன்மீக அரசியல்-பின்னணி! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: மேல்மருவத்தூரில் ஆன்மீக அரசியல்-பின்னணி!

வியாழன் 15 ஜூலை 2021