மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 15 ஜூலை 2021

முருகனுக்கு கீழேதான் மீடியாக்கள் வரப் போகுது: அண்ணாமலை ஓப்பன் மிரட்டல்!

முருகனுக்கு கீழேதான் மீடியாக்கள் வரப் போகுது: அண்ணாமலை ஓப்பன் மிரட்டல்!

தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலை கோவையில் இருந்து சென்னைக்கு சாலை மார்க்கமாக பயணமாகப் புறப்பட்டுச் சென்று கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் இன்று ஜூலை 15 ஆம் தேதி கடலூரில் உற்சாகமாக அளிக்கப்பட்ட வரவேற்புக்குப் பின் வாகனத்தில் ஏறி தொண்டர்களிடம் பேசினார்.

அப்போது, “நாம் நுழைவதுதான் கஷ்டம், நுழைந்துவிட்டால் ஆட்சியைப் பிடிப்பது எளிது. இன்னும் ஐந்து வருடத்தில் 150 சீட்டுகளை நாம் தமிழ்நாட்டில் பெறுவோம். அதற்கு முக்கியமானது நம் கட்சியை கிராமங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.  கட்சியை பற்றிய சித்தாந்தங்கள், பிரதமர் மோடியின் திட்டங்களை கிராமங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

நம் கட்சியில்தான் இளைஞர்கள் பட்டாளம் அதிகமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் தான் ஜெய்ஹிந்த் என்பதை சட்டமன்றத்தில் சொல்ல கூச்சப்படும் சட்டமன்ற உறுப்பினர்கள் வருகிற காலம் தமிழகத்தில் பாஜக காலம்” என்று பேசியுள்ளார் அண்ணாமலை.

இதற்கிடையே தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளரான லட்சுமி சுப்பிரமணியம் தனது ட்விட்டரில், பதவியேற்புப் பயணத்தின் போது மீடியாக்களை நேரடியாக மிரட்டும் தொனியில் அண்ணாமலை பேசிய வீடியோவை வெளியிடிருக்கிறார்.

அந்த வீடியோவில் பேசும் அண்ணாமலை,  " இந்த மீடியாவை நீங்கள் மறந்துவிடுங்கள். நம்மளைப் பத்தி பொய்யா செய்தி போடறாங்க, என்ன பண்ணலாம்.அதெல்லாம் நீங்க மறந்துடுங்க. அடுத்த ஒரு ஆறு மாதத்துக்குள் நீங்க பார்ப்பிங்க. அந்த  மீடியாவை நாம் கன்ட்ரோல் பண்ணலாம், கையிலெடுக்கலாம். அதப் பத்தி நீங்க ஒரி பண்ணிக்காதீங்க. காரணம் என்னவென்றால், தொடர்ந்து பொய்யான விஷயங்களை  எந்த ஒரு ஊடகமும் சொல்ல முடியாது. இத்தனைக்கும் இதற்கு முன் மாநிலத் தலைவராக இருந்த முருகன் ஐயா அவர்கள், செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சராக  இருக்கிறார். எல்லா ஊடகங்களும் அவருக்குக் கீழேதான் வரப் போகுது. ஏனென்றால் தொடர்ந்து தப்புகள் நடக்க முடியாது.  தப்பான ஒரு செய்தியைத் தொடர்ந்து செய்யமுடியாது. அதை வைத்து அரசியல் செய்ய முடியாது நிச்சயம் உடைப்போம்" என்று பேசியுள்ளார்.

தனக்கு கிடைத்த இணை அமைச்சர் பதவியை வைத்து  தமிழகத்துக்கு நன்மை செய்யப் போவதாக முருகன் கூறியிருந்த நிலையில், முருகன் செய்தி துறை அமைச்சர் ஆக்கப்பட்டதே மீடியாக்களை கட்டுப்படுத்துவதற்குத்தான் என்ற பொருள்பட பேசியிருக்கிறார் அண்ணாமலை.

-வேந்தன்

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

4 நிமிட வாசிப்பு

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

ஜேப்பியார் குழுமம் ஆக்கிரமித்திருந்த நிலம் மீட்பு!

3 நிமிட வாசிப்பு

ஜேப்பியார் குழுமம் ஆக்கிரமித்திருந்த நிலம் மீட்பு!

உள்ளாட்சித் தேர்தல்: திணறும் திமுக-காங்கிரஸ் கூட்டணி!

9 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: திணறும் திமுக-காங்கிரஸ் கூட்டணி!

வியாழன் 15 ஜூலை 2021