மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 15 ஜூலை 2021

பிளஸ் 2 முடிவுகள் தயார்: அன்பில் மகேஷ்

பிளஸ் 2 முடிவுகள்  தயார்: அன்பில் மகேஷ்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தயாராக உள்ளது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

கொரோனா காரணமாக இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதோடு,

1.10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு (உயர் மதிப்பெண் பெற்ற 3 பாடங்களுடைய சராசரி) - 50%

2. 11 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு (ஒவ்வொரு பாடத்திலும் பெற்ற எழுத்துமுறை (Written) மதிப்பெண் மட்டும்) - 20%

3. 12 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு (Practical) / அக மதிப்பீடு (Internal) - 30% ஆகிய அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஏற்கனவே பள்ளிக் கல்வித் துறையிடம் மாணவர்களின் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் இருந்த நிலையில், 12ஆம் வகுப்பு செய்முறை தேர்வு மதிப்பெண்கள் பள்ளிகளிடம் இருந்து பெறப்பட்டு, இறுதி மதிப்பெண்கள் போடும் பணி நடைபெற்றது. அதை இணையத்தில் பதிவேற்றும் பணியும் நடைபெற்றது.

மதிப்பெண் சரிபார்க்கும் பணி நிறைவடைந்துள்ளதால், முன்கூட்டியே பிளஸ் 2 மதிப்பெண் வெளியிட பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், தேர்வு முடிவு தொடர்பாகச் சென்னை எழிலகத்தில் நடந்த மாநில வளர்ச்சி குழுக் கூட்டத்தில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் பங்கேற்றபின் அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் பேசினார்.

அவர் கூறுகையில், "ஜூலை 31ஆம் தேதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று ஏற்கனவே சொல்லியிருந்தோம். அனைத்து நடைமுறைகளும் முடிந்து, பிளஸ் 2 மதிப்பெண்கள் வெளியிடத் தயாராக உள்ளோம். முதல்வர் எந்த தேதியில் சொல்கிறாரோ அன்று முடிவு வெளியிடப்படும். நாளை மாலை நடக்கும் மாவட்ட கல்வி அலுவலர்களின் கூட்டத்துக்குப் பின், முக்கிய முடிவுகள் அறிவிக்கப்படும்.

பள்ளிகள் திறப்பது குறித்தும் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். நீட் தேர்வு அறிவிக்கப்பட்டிருப்பது மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் எனக்கும் கவலை அளிக்கிறது என முதல்வர் கூறியுள்ளார். தொடர்ந்து நீட்டுக்கு எதிரான சட்டப்போராட்டம் தொடரும்” என்றார்.

-பிரியா

கிஷ்கிந்தாவின் 177 ஏக்கர் கோயில் நிலம்: சேகர்பாபு

4 நிமிட வாசிப்பு

கிஷ்கிந்தாவின் 177 ஏக்கர்  கோயில் நிலம்: சேகர்பாபு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் கண்டனம்!

4 நிமிட வாசிப்பு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் கண்டனம்!

உள்ளாட்சித் தேர்தல்: மேல்மருவத்தூரில் ஆன்மீக அரசியல்-பின்னணி! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: மேல்மருவத்தூரில் ஆன்மீக அரசியல்-பின்னணி!

வியாழன் 15 ஜூலை 2021