மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 15 ஜூலை 2021

இருவழி சாலை நான்குவழி சாலையாக மாற்றப்படும்: எ.வ.வேலு

இருவழி சாலை நான்குவழி சாலையாக மாற்றப்படும்: எ.வ.வேலு

தமிழ்நாட்டில் சாலை விபத்துக்களை குறைப்பதற்காக இரண்டு வழி சாலைகள், நான்கு வழிசாலையாக மாற்றப்படும் என பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களின் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டம் அமைச்சர் எ.வ. வேலு தலைமையில் இன்று(ஜூலை 15) நடைபெற்றது.

கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், “திட்டப்பணிகளை காலதாமதமின்றி நடத்தி முடிக்க வேண்டும். மக்கள் தெரிவிக்கும் நிறை குறைகளை கேட்டு அவற்றை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய வேண்டும். நிலுவையில் உள்ள வளர்ச்சித் திட்ட பணிகளை துரிதமாகவும் அதே நேரத்தில் தரமானதாகவும் மேற்கொள்ள வேண்டும்” என்று பேசினார்.

பின்னர் நான்கு மாவட்டங்களில் தற்போது நடந்து வரும் திட்டப்பணிகள் குறித்து கேட்டறிந்தார். இக்கூட்டத்தில் 4 மாவட்டங்களிலும் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறையில் உள்ள முடிவுற்ற பணிகள், முன்னேற்றத்தில் உள்ள பணிகள், மீதமுள்ள பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், “தமிழ்நாட்டில் நகரப்பகுதிகள் மற்றும் பேரூராட்சிகளில் புறவழி சாலை அமைப்பதற்கான திட்ட மதிப்பீடுகளை அதிகாரிகள் தயாரித்து கொண்டிருக்கின்றனர். தமிழ்நாட்டில் சாலை விபத்துகளை தடுக்க 2 வழி சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்படும். குறிப்பாக சேலம் உளுந்தூர்பேட்டை நான்கு வழி சாலை 20 இடங்களில் இரண்டு வழி சாலையாக உள்ளது. இதனை நான்கு வழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். டெல்லி செல்லும்போது இது சம்பந்தமாக துறை சார்ந்த அமைச்சரிடம் பேசவுள்ளோம்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “விபத்துக்களை குறைக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதாவது ஒரு பகுதியில் ஐந்து முறை விபத்து ஏற்பட்டால் அது விபத்து பகுதி என்று பொருள். விபத்து பகுதியை உறுதி செய்வதற்காக காவல்துறை, நெடுஞ்சாலை துறையிலுள்ள உதவி பொறியாளர்கள், ஆர்டிஓ ஆகியோர் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்படும். இக்குழு தரும் அறிக்கைகள் மூலம் சாலையை எவ்வாறு அமைத்தால் விபத்தை தவிர்க்கலாம் என்பதை ஆராய்ந்து அரசு நடவடிக்கை எடுக்கும்.

பல இடங்களில் ரயில்வே மேம்பாலங்கள் பணி நிலுவையில் உள்ளது. ரயில்வே இருப்பு பாதைக்கு மேலாக போடப்படும் இணைப்பு மேம்பால பணிகள் ரயில்வேத்துறையினரால் விரைவாக முடிக்கப்படாததால் பல பாலங்கள் கிடப்பில் இருந்து வருகிறது. அதுபோன்று, சாலைகள் அமைக்க நில எடுப்பும் தாமதமாகிறது. இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில் 10 ஆயிரம் கி.மீ. சாலைகள் 5 ஆண்டுகளுக்குள் செப்பனிட்டு தரமானதாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

-வினிதா

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

6 நிமிட வாசிப்பு

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

4 நிமிட வாசிப்பு

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

வியாழன் 15 ஜூலை 2021