மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 15 ஜூலை 2021

அறிவாலயம் கலையாகும் அன்பகம் கலை: ஆர்.எஸ். பாரதிக்கு புது அசைன்மென்ட்!

அறிவாலயம் கலையாகும் அன்பகம் கலை: ஆர்.எஸ். பாரதிக்கு புது அசைன்மென்ட்!

திமுகவில் இன்று ஜூலை 15 அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய நியமனம் திமுக என்ற கட்சிக்குள்ளும் திமுகவை தாண்டி அதிமுகவுக்குள்ளும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய முரசொலியில்,

"கழக சட்ட திட்ட விதிகள் 18,19ன் படி கழகத்தின் துணை அமைப்பு செயலாளராக அன்பகம் கலை நியமிக்கப்படுகிறார்"என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பின் முக்கியத்துவம் குறித்து திமுக சீனியர் நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்.

"திமுகவில் அமைப்புச் செயலாளர் என்பது முக்கியமான பதவி. தற்போது அமைப்புச் செயலாளராக ஆர் எஸ் பாரதி இருக்கிறார். கட்சியின் உட்கட்சி தேர்தல் தொடர்பான பிரச்சினைகள், உட்கட்சிப் பூசல்கள் போன்றவற்றை உரிய முறையில் விசாரித்து தலைவருக்கு பரிந்துரைகளை செய்வதுதான் அமைப்புச் செயலாளருடைய வேலை.

இந்த வகையில் பல்வேறு மாவட்டங்களில் நிலவும் உட்கட்சிப் பூசல்கள் குறித்து ஆர்.எஸ். பாரதியிடம் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன அதன்பேரில் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் ஒரு சில நிர்வாகிகள் ஆர் எஸ் பாரதி மீதே சில புகார்களை தலைமைக்கு அனுப்பியும் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினின் சுமார் 30 வருடங்களுக்கும் மேலான நம்பிக்கைக்குரிய அன்பகம் கலை இப்போது துணை அமைப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்டாலின் இளைஞரணி செயலாளராக இருந்தபோது அதன் தலைமையகமான அன்பகத்தில் நடக்கும் அனைத்து விவகாரங்களையும் கலை தான் கவனித்துக் கொள்வார். அதனாலேயே அவருக்கு அன்பகம் கலை என்ற பெயர்.

ஸ்டாலினுக்கு நெருக்கமான மாவட்ட செயலாளர்கள் கூட ஒரு சில விஷயங்களை கலை மூலமாகத்தான் ஸ்டாலின் காதுக்கு கொண்டு செல்வார்கள். அப்படிப்பட்ட ஸ்டாலினின் விசுவாசிகள் பட்டியலில் முக்கிய இடத்தில் இருக்கும் அன்பகம் கலை இப்போது அறிவாலயம் கலை ஆக்கப்பட்டி ருக்கிறார்.

ஸ்டாலினுக்கு மட்டுமல்ல உதயநிதி இளைஞரணி செயலாளராக பதவி ஏற்ற பிறகு உதயநிதிக்கும் முழுமையான நம்பிக்கைக்குரியவராக கலை இருக்கிறார்.

ஆர்.எஸ். பாரதி கட்சிப் பஞ்சாயத்துகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தாலும் தற்போது அவருக்கு வேறு ஒரு சட்ட ரீதியான முக்கிய பணி கொடுக்கப்பட்டிருப்பதால் தான் அன்பகம் கலை துணை அமைப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதாவது திமுக ஆட்சிக்கு வந்ததும் முந்தைய அதிமுக ஆட்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் முந்தைய அதிமுக அரசின் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளை துல்லியமாக ஆராய்ந்து சட்டரீதியாக அவற்றை முன்னெடுக்கும் பணியில் ஆர் எஸ் பாரதி முழுமையாக ஈடுபடுத்தப்பட இருக்கிறார். இதற்காகவே அவரது கட்சிப் பணி சுமையை குறைக்கும் வகையில் அன்பகம் கலை துணை அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டடிருக்கிறார்" என்கிறார்கள் திமுக சீனியர்கள்.

-வேந்தன்

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் ...

3 நிமிட வாசிப்பு

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் கேள்வி!

புதுச்சேரி எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

5 நிமிட வாசிப்பு

புதுச்சேரி  எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன? ...

13 நிமிட வாசிப்பு

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன?

வியாழன் 15 ஜூலை 2021