மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 15 ஜூலை 2021

புதுவையில் பள்ளிகள் திறப்பு இல்லை: தமிழகத்தில்?

புதுவையில்  பள்ளிகள் திறப்பு இல்லை: தமிழகத்தில்?

புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.

புதுச்சேரியில் நாளை 9 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்காகப் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு, எதிர்ப்பு கிளம்பிய நிலையில், கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் இன்று (ஜூலை 15) ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, கொரோனா காரணமாகப் பள்ளிகள் திறப்பைத் தள்ளி வைக்க மாணவர்கள், பெற்றோர், அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்தது குறித்து ஆலோசிக்கப்பட்டது

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம்,

“கொரோனா நோய்த்தொற்று முழுமையாகக் குறையவில்லை. பள்ளிகள் திறப்பை மறுபரிசீலனை செய்யக் கோரிக்கை வந்தது. முதல்வர், ஆளுநருடன் பேசிய பிறகு அவர்களின் ஒப்புதலோடு பள்ளிகள் திறப்பைத் தள்ளிவைக்க அரசு முடிவு எடுத்துள்ளது. எந்தத் தேதி என பிறகு அறிவிக்கப்படும். இப்போதைக்குப் பள்ளி, கல்லூரிகள் திறப்பு இல்லை.

ஆன்லைனில் தேர்வு நடத்துவது தொடர்பாக கல்வித்துறை இயக்குநருக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. தனியார் கல்விக் கட்டணம் குறித்துக் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு நீட் தேர்வு தொடர்பாகப் புதுவை அரசு நடவடிக்கை எடுக்கும்” என்றார்.

தமிழகம்

புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், புதுச்சேரியைப் போன்று தமிழகத்திலும் பள்ளிகளைத் திறக்க ஆலோசனை நடந்து வருவதாகத் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார்.

அதன்படி, தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது பற்றி முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகா்லா உஷா நாளை (ஜூலை 16) ஆலோசனை நடத்துவார் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்தது.

இந்நிலையில் புதுவை பள்ளிகள் திறப்பு தேதி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

-பிரியா

விஜிலென்ஸ் வருகை: இரவில் சென்று பகலில் வந்த எடப்பாடியின் நண்பர் ...

6 நிமிட வாசிப்பு

விஜிலென்ஸ் வருகை:  இரவில்  சென்று   பகலில் வந்த எடப்பாடியின் நண்பர் இளங்கோவன்

துரைமுருகன் ஆதரவாளர்களை துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின் ...

10 நிமிட வாசிப்பு

துரைமுருகன் ஆதரவாளர்களை  துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின்

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

9 நிமிட வாசிப்பு

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

வியாழன் 15 ஜூலை 2021