மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 15 ஜூலை 2021

'அத்தைக்கு மீசை முளைக்கட்டும்': ஜெயக்குமார்

'அத்தைக்கு மீசை முளைக்கட்டும்':  ஜெயக்குமார்

கொங்குநாடு சர்ச்சை குறித்து, 'அத்தைக்கு மீசை முளைக்கட்டும், மற்ற விஷயங்களை பின்னர் பார்க்கலாம்’ என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஒன்றிய அமைச்சரவை விரிவாக்கத்தில் ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகனுக்கான அறிமுக விவரக் குறிப்பில் ‘கொங்கு நாடு’ என்று இடம்பெற்றதிலிருந்துதான் கொங்கு நாடு சர்ச்சை உருவானது. அப்படி ஒரு கோரிக்கையை வைக்கவில்லை என பாஜக தெரிவித்த பிறகும், கொங்குநாடு சர்ச்சை விவாத பொருளாக மாறியுள்ளது. இதற்கு திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜரின் 119 வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று(ஜூலை 15) சென்னை, தியாகராய நகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், ” தமிழ்நாட்டில் கல்வித்தரத்தை உயர்த்த வேண்டும் என்று பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டவர் காமராஜர். அவர் புகழ் என்றும் மங்காது.

மேகதாது விவகாரம் குறித்து அதிமுக ஏற்கனவே தனது நிலைப்பாட்டை அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக எடுக்கப்படும் அனைத்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கும் அதிமுக ஆதரவு தரும். நாளைக்கு அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் கூட்டத்தில் அதிமுக சார்பாக பங்கேற்கிறேன்.

காவிரி நதிநீர் என்பது ஜீவாதார உரிமை. டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலன். ஒட்டுமொத்த தமிழக மக்களின் நலன் என்ற வகையில், அதனை நிலைநாட்ட வேண்டும் என்பதனால்தான், முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் கடந்த காலங்களில் போராடி, வாதாடி, அந்த உரிமையை நிலைநாட்டினர். எந்த நிலையிலும் நம் உரிமை பறிபோய்விடக் கூடாது” என்றார்.

கொங்குநாடு விவகாரத்தில் அதிமுக எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை, அதனால், அதை அதிமுக ஆதரிக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்,” முதலில் அத்தைக்கு மீசை முளைக்கட்டும், மற்ற விஷயங்களை பிறகு பார்க்கலாம்'' என்று கூறினார்.

-வினிதா

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்: கடலூர் எம்.பி மீது கொலை வழக்கு?

10 நிமிட வாசிப்பு

போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்: கடலூர் எம்.பி மீது கொலை வழக்கு?

மோடியை அவமதித்தாரா கமலா ஹாரிஸ்?

4 நிமிட வாசிப்பு

மோடியை அவமதித்தாரா கமலா ஹாரிஸ்?

வியாழன் 15 ஜூலை 2021