மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 15 ஜூலை 2021

மேகதாது: டெல்லி செல்லும் சட்டப்பேரவை கட்சிகள் குழு!

மேகதாது: டெல்லி செல்லும் சட்டப்பேரவை கட்சிகள் குழு!

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, பிரதமரைச் சந்திப்பதற்காக தமிழகத்தின் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு இன்று (ஜூலை 15) டெல்லி செல்கிறது.

மேகதாது அணையைக் கட்ட தமிழகம் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறது. ஆனால் அணையைக் கட்டியே தீருவோம் என்று அதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார் கர்நாடக முதல்வர் எடியூரப்பா.

கடந்த 12ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற சட்டப்பேரவை அனைத்து கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, காவிரியின் கீழ்படுகை மாநிலங்களிடம் அனுமதி பெறாமல், மேகதாதுவில் எந்த கட்டுமானப் பணியையும் மேற்கொள்ளக் கூடாது. கர்நாடக அரசின் திட்டத்திற்கு, மத்திய அரசு எவ்விதமான அனுமதியையும் பெறக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழகத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அடுத்த தினமே ஒன்றிய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தைச் சந்தித்து மேகதாது அணை கட்டுவது தொடர்பாக பேசினார் எடியூரப்பா. இதன்பின், செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழகத்தைப் பற்றி பேச விரும்பவில்லை. விரைவில் அணைக் கட்டும் பணி தொடங்கப்படும். மேகதாது உட்பட அனைத்து நீர்பாசன திட்டங்களுக்கும் அனுமதி அளிப்பதாக ஒன்றிய அமைச்சர் தெரிவித்தார்" என்று கூறினார்.

ஒன்றிய அரசைப் பொறுத்தவரையில் மேகதாது விவகாரத்தில், காவிரி கீழ்படுகை மாநிலங்களின் முடிவை கேட்க ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைப் பிரதமரிடமும், ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரிடமும் கொடுப்பதற்காக, சட்டப் பேரவை அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு இன்று டெல்லி செல்லவுள்ளது. இக்குழு நாளை பிரதமர் நரேந்திர மோடி, ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் ஆகியோரை சந்தித்து, மேகதாது விவகாரம் உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து மனு அளிக்க உள்ளது.

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

4 நிமிட வாசிப்பு

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

ஜேப்பியார் குழுமம் ஆக்கிரமித்திருந்த நிலம் மீட்பு!

3 நிமிட வாசிப்பு

ஜேப்பியார் குழுமம் ஆக்கிரமித்திருந்த நிலம் மீட்பு!

உள்ளாட்சித் தேர்தல்: திணறும் திமுக-காங்கிரஸ் கூட்டணி!

9 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: திணறும் திமுக-காங்கிரஸ் கூட்டணி!

வியாழன் 15 ஜூலை 2021