மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 15 ஜூலை 2021

1000 அட்டைகளுக்கு மேல் உள்ள ரேஷன் கடைகள் பிரிப்பு : அமைச்சர் சக்கரபாணி

1000 அட்டைகளுக்கு மேல் உள்ள ரேஷன் கடைகள் பிரிப்பு : அமைச்சர் சக்கரபாணி

1000 அட்டைகளுக்கு மேல் உள்ள ரேஷன் கடைகள் பிரிக்கப்படும் என்று உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக்கடைகளில் உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி நேற்று (ஜூலை 15) ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “தமிழகத்தில் 1,000 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள நியாய விலைக் கடைகள் 5 ஆயிரத்துக்கும் மேல் உள்ளன. அவற்றை உடனடியாக பிரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அக்கடைகளைப் பிரித்து பகுதிநேரக் கடைகள் அமைக்கப்படும்.

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு 15 நாட்களுக்குள் ரேஷன் கார்டு வழங்கப்படும். ரேஷன் கடைகளில் தரமான பொருட்கள் வழங்கப்படுகிறதா என ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் மாதத்துக்கு 10 ரேஷன் கடைகளிலும், கூட்டுறவுச் சங்க இணைப்பதிவாளர் 30 கடைகளிலும் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

வாடகை கட்டிடங்களில் இயங்கக் கூடிய ரேஷன் கடைகளுக்குச் சொந்த கட்டிடம் கட்டப்படும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் இந்த கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கடல் வழியாக ரேஷன் பொருட்கள் கடத்தலைத் தடுக்க கடலோர காவல்படையுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பெண்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அறிவித்த வாக்குறுதிகளை முதலமைச்சர் நிறைவேற்றுவார்.

தமிழகத்துக்கே முன்னுதாரணமாகத் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் பேரவைத் தொகுதியில் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல், குடும்ப அட்டையில் திருத்தம் போன்றவற்றுக்காக ராதாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று (ஜூலை 15) சிறப்பு முகாம் நடத்தப் பேரவைத் தலைவர் அப்பாவு ஏற்பாடு செய்துள்ளார். இதுபோன்ற முகாம்களை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் நடத்தத் திருநெல்வேலி ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

-பிரியா

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் ...

3 நிமிட வாசிப்பு

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் கேள்வி!

புதுச்சேரி எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

5 நிமிட வாசிப்பு

புதுச்சேரி  எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன? ...

13 நிமிட வாசிப்பு

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன?

வியாழன் 15 ஜூலை 2021