மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 14 ஜூலை 2021

காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்: ரகசியம் உடைத்த ராகுல் நண்பர்!

காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்: ரகசியம் உடைத்த ராகுல் நண்பர்!

தேர்தல் உத்தி வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் நேற்று (ஜூலை 13) டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருடன் சந்திப்பு நடத்திய நிலையில், பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் சேரப் போகிறார் என்ற கணிப்புகள் இன்று (ஜூலை 14) அரசியல் வட்டாரங்களில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன.

நேற்று மாலை டெல்லியில் ராகுல் காந்தியின் வீட்டில் பிரசாந்த் கிஷோர் அவரை சந்தித்தார். அப்போது உத்திரப்பிரதேச பொறுப்பாளரும் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி, பஞ்சாப் பொறுப்பாளர் ராவத், பொதுச் செயலாளர் வேணுகோபால் ஆகியோர் இருந்தனர். காணொலி முறையில் சோனியா காந்தியும் பிரசாந்த் கிஷோருடன் அப்போது பேசினார்.

வரும் சட்டமன்றத் தேர்தல்கள், மக்களவைத் தேர்தல் ஆகியவற்றுக்காக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பிரம்மாண்ட அணியை அமைக்க பிரசாந்த் கிஷோர் வியூகம் அமைக்கிறார் என்றும், அதை ஒட்டியே இந்த சந்திப்பு நடந்திருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில்தான் பிரசாந்த் கிஷோர் காங்கிரசில் சேரப் போகிறார் என்று தகவல்கள் பரவிக் கொண்டிருக்கின்றன. இன்று (ஜூலை 14) பகல் ராகுல் காந்தியின் நெருக்கமான நண்பரும், காங்கிரஸ் குறை தீர்க்கும் பிரிவின் தலைவருமான பத்திரிகையாளர் அர்ச்சனா டால்மியா தனது ட்விட்டர் பதவில்,

‘ வருக வருக பிரசாந்த் கிஷோர்.... காங்கிரஸ் குடும்பத்துக்கு தங்களை அன்போடு வரவேற்கிறேன்’என்று ட்விட்டினார். சில நிமிடங்களிலேயே அந்தப் பதிவை நீக்கிவிட்டார் அர்ச்சனா.

ராகுல் காந்திக்கு நெருக்கமான நண்பரான அர்ச்சனாவின் ட்விட்டரிலேயே இத்தகவல் பகிரப்பட்டதால் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் சேரப் போகிறார் என்ற தகவல் பலமாகப் பரவியது.

மேற்கு வங்காள தேர்தல் வெற்றிக்குப் பிறகு பிரசாந்த் கிஷோர், ‘இப்போது நான் என்ன செய்துகொண்டிருக்கிறேனோ அதை நான் தொடர விரும்பவில்லை’ என்று கூறினார். இதையும், ஐக்கிய ஜனதா தளத்தின் துணைத் தலைவராக அமித் ஷா சொல்லிதான் பிரசாந்த் கிஷோரை நியமித்தேன் என்று ஒரு கட்டத்தில் பிகார் முதல்வர் நிதிஷ்குமார் சொன்னதையும் இன்று பலரும் நினைவுகூர்ந்து அலசிக் கொண்டிருக்கிறார்கள்.

-வேந்தன்

சொந்தக் கட்சியினர் மீதும் பிறாண்டத் தொடங்கிய பி.டி.ஆர்: முதல்வர் ...

8 நிமிட வாசிப்பு

சொந்தக் கட்சியினர் மீதும் பிறாண்டத் தொடங்கிய பி.டி.ஆர்:  முதல்வர்  ஆக்‌ஷன் என்ன?

தொழிலாளி கொலை: கைதாவாரா திமுக எம்.பி?

6 நிமிட வாசிப்பு

தொழிலாளி கொலை: கைதாவாரா திமுக எம்.பி?

நான் வழக்குப் போட்டேனா? திமுகவுக்கு எடப்பாடி நேரடி கேள்வி!

4 நிமிட வாசிப்பு

நான்  வழக்குப் போட்டேனா?  திமுகவுக்கு எடப்பாடி நேரடி கேள்வி!

புதன் 14 ஜூலை 2021