மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 14 ஜூலை 2021

திரையரங்குகள் திறக்கப்படுமா? அமைச்சர் சாமிநாதன்

திரையரங்குகள் திறக்கப்படுமா? அமைச்சர் சாமிநாதன்

கொரோனா மூன்றாம் அலையின் காரணமாகத் திரையரங்குகள் திறப்பு குறித்து உடனடியாக முடிவெடுக்க முடியாது என்று செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் தெரிவித்தார்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் மூடப்பட்டன. இடையில் கொரோனா பரவல் குறைந்ததும் மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டு, மாஸ்டர், சுல்தான் உள்ளிட்ட படங்கள் வெளியாகின. ஆனால் இரண்டாம் அலையின் காரணமாக மூடப்பட்ட திரையரங்குகள் இன்னும் திறக்கப்படவில்லை. இதனால் தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் முதல் திரைத்துறையின் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே ஊரடங்கு தளர்வுகளில் திரையரங்குகளைத் திறக்க அனுமதி கிடைக்குமா என திரைத்துறை வட்டாரமே காத்திருக்கிறது.

இதுகுறித்து சென்னை, கிண்டியில் பேசிய அமைச்சர் சாமிநாதன், “ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள ஒளிப்பதிவு சட்டத்திருத்த வரைவு மசோதாவால் யாரேனும் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு அரசு துணை நிற்கும்.

திரையரங்குகள் திறப்பு குறித்து உடனடியாக முடிவெடுக்க முடியாது. முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்கள் மற்றும் சட்டமன்ற அனைத்துக் கட்சி குழுவை அமைத்துள்ளார். அவர்களிடம் ஆலோசனை பெற்று, பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டு, ஆழ்ந்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

மீண்டும் கொரோனா பரவிவிடாத சூழலில் தான் திரையரங்குகளைத் திறக்க முடியும். ஏற்கனவே, உலக சுகாதார அமைப்பும், ஒன்றிய அரசும் கொரோனா மூன்றாம் அலை குறித்து எச்சரித்து வருகின்றன. தளர்வுகள் என வருகிற போது கொரோனா மேலும் பரவி பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என முதல்வர் எச்சரிக்கையுடன் இருக்கிறார்” என்று கூறினார்.

-பிரியா

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த ‘விஷய’ பாஸ்கர்!

8 நிமிட வாசிப்பு

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த  ‘விஷய’ பாஸ்கர்!

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

2 நிமிட வாசிப்பு

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

8 நிமிட வாசிப்பு

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

புதன் 14 ஜூலை 2021