மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 14 ஜூலை 2021

ஊரடங்கு விதிமீறல்: ஒன்றிய உள்துறை செயலாளர் எச்சரிக்கை!

ஊரடங்கு விதிமீறல்: ஒன்றிய உள்துறை செயலாளர் எச்சரிக்கை!

கட்டுப்பாடுகள் விதிப்பது அல்லது தளர்வுகளை அறிவிப்பது தொடர்பாக மிகவும் கவனமாக முடிவெடுக்குமாறு ஒன்றிய உள்துறைச் செயலாளர் அஜய் பல்லா, அனைத்து மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக இந்திய மக்களை ஆட்டிப்படைத்து வருகிறது. தற்போது பாதிப்பு குறைந்து வருகிறது என்றாலும், இன்னும் இரண்டாம் அலையே ஓயவில்லை. மூன்றாம் அலைக்கும் வாய்ப்பு உள்ளது என மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

இதனிடையே பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு ஊரடங்கில் மாநில அரசுகள் தளர்வுகளை அறிவித்து வருகின்றன. தமிழகத்தில் தளர்வுகளுடன் ஜூலை 19 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக தலைமை செயலாளர் இறையன்பு உட்பட அனைத்து மாநில தலைமைச் செயலாளருக்கும் ஒன்றிய உள்துறை செயலாளர் அஜய் பல்லா எழுதியுள்ள கடிதத்தில்,

“நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொதுப் போக்குவரத்து, சந்தைகள் மற்றும் மலைப் பிரதேசங்களில் விதிமீறல்கள்  கண்டறியப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் அதிகரித்துள்ள பாதிப்பு எண்ணிக்கை கவலை அளிப்பதாக உள்ளது. கூட்ட நெரிசல் காணப்படும் பொது இடங்கள் மற்றும் வணிக வளாகங்களில் கோவிட்  நடத்தை விதிமுறைகள் பின்பற்றப்படுவதை  உறுதி செய்வது, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பொறுப்பு.

விதிகளை மீறுபவர்கள் மீதும், கோவிட்-19 தொற்று பரவுவதற்குக் காரணமாக இருப்பவர்கள் மீதும் மீண்டும் கடுமையான நடவடிக்கைகள், அபராதங்கள் மற்றும் போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கோவிட் தொற்றின் இரண்டாவது அலை இன்னும் நீங்கவில்லை. பரிசோதனை, தடம் அறிதல், சிகிச்சை, தடுப்பூசி,  விதிமுறையைப் பின்பற்றுதல்  ஆகிய 5 உத்திகளில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும்.

கூட்ட நெரிசல் ஏற்படும் பகுதிகளில் கட்டுப்பாடுகளை விதிக்குமாறும், கோவிட் சரியான நடத்தை விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படுவதைக் கண்காணிக்குமாறும் மாவட்ட அதிகாரிகள் மற்றும் அனைத்து உள்ளூர் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். விதிமீறல்களுக்கு அதிகாரிகள் பொறுப்பேற்குமாறு மாநில அரசுகள் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

-பிரியா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

புதன் 14 ஜூலை 2021