மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 14 ஜூலை 2021

வயது முக்கியமில்லை: பதவியேற்பதற்கே சுற்றுப் பயணம் தொடங்கிய அண்ணாமலை

வயது முக்கியமில்லை:  பதவியேற்பதற்கே சுற்றுப் பயணம் தொடங்கிய அண்ணாமலை

தமிழக பாஜகவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலை, கட்சி அலுவலகத்துக்குச் சென்று பொறுப்பேற்க இருக்கும் நிகழ்வையே ஒரு யாத்திரைத் திட்டமாக மாற்றி சக அரசியல் கட்சிகளை ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

கொங்குநாடு தேவை என்று பாஜகவில் இருந்தே பலரும் பேசி வரும் நிலையில் கோவையில் இருந்து சென்னையில் இருக்கும் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்துக்கு இன்று (ஜூலை 13) காலை தனது சாலை மார்க்கமான பயணத்தைத் தொடங்கினார் அண்ணாமலை. நிர்வாகிகளும் தொண்டர்களும் கோவை தொடங்கி சென்னை வரை அவரை வரவேற்க பாயின்ட்டுகளை ஃபிக்ஸ் செய்து நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தனர். மூன்று நாட்கள் சாலை வழியே பயணம் செய்து, 16 ஆம் தேதி கமலாலயம் சென்று சேர்ந்து அங்கே மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்கிறார்.

சென்னை நோக்கிய பயணத்துக்கு முன் கோயில்களிலும் வழிபாடு நடத்தினார். பிரசித்தி பெற்ற கோவை தண்டுமாரியம்மன் கோயிலில் சாமிகும்பிட்ட அண்ணாமலையை கோவை வ.உ.சி மைதானத்தில் சுமார் 2 ஆயிரம் பேருக்கு மேல் வரவேற்றனர்.

தனது பயணத்தைத் தொடங்கும் முன் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை,

“5 நாட்களுக்கு முன் தேசிய தலைவர் ஜே.பி நட்டா என்னை தமிழக பாஜகவின் மாநிலத் தலைவராக நியமித்து ஆணை பணித்திருந்தார். அதற்காக வரும் 16 ஆம் தேதி நம்முடைய கமலாலயத்திலே பொறுப்பேற்க இருக்கிறோம். வசிப்பிடமான கோவையில் இருந்து சென்னைக்கு ரோடு மார்க்கமாக பயணம் செய்கின்றோம். போகின்ற வழியிலே நிர்வாகிகள், தொண்டர்களை பார்த்துக்கொண்டு செல்கின்றோம். கோவிட் காலமாக இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.

கமலாலயம் சென்று தமிழக பாஜக தலைவராக பதவியேற்று தமிழக பாஜக வளர்ச்சிக்கு நல்ல செயலாற்றுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

நமக்கு ஒரு திட்டம் இருக்கிறது. பிஜேபி தனி மனித கட்சி கிடையாது. தமிழகத்தில் மற்ற கட்சிகள் தனி மனித கட்சிகள். ஆனால் பிஜேபி ஒரு கூட்டு முயற்சிதான். நிறைய தலைவர்கள் நம்மிடம் இருக்கிறார்கள். ஒருபக்கம் அனுபவம் நிறைய இருக்கிறது, ஒரு பக்கம் இளைமை நிறைய இருக்கிறது. அனைவரையும் சேர்த்து கூட்டு முயற்சியாக தமிழக பாஜக மிகப்பெரிய கட்சியாக வரும் என்ற நம்பிக்க இருக்கிறது என்றவரிடம்,

“மிக இளம் வயதில் பாஜக தலைவர் பதவியேற்கிறீர்கள். என்ன மாதிரியான சவால் இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?”என்ற கேள்விக்கு,

“ வயது என்னைப் பொறுத்தவரை முக்கியம் கிடையாது. அனுபவத்தைப் பொறுத்து நமது பல தலைவர்கள் கமிஷன்களிலும், கமிட்டிகளிலும், அமைச்சர்களாகவும், ஆளுநர்களாகவும் இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் இளமையான தலைவர்கள் இருக்கிறார்கள். பிற கட்சிகளில் தலைவர்கள் ஒரு குடும்பத்தில் இருந்துதான் வருவார்கள். ஆனால், பிஜேபியில் மாநிலத் தலைவர் என்பது அனைவரையும் இணைத்துக்கொண்டு செல்லும் ஒரு வாய்ப்பாகத்தான் பார்க்கிறேன். இதில் வயது ஒரு முக்கியமான விஷயம் கிடையாது. நாங்கள் ஒன்றாக சேர்ந்துதான் பயணம் செய்கிறோம். இது தனி மனிதக் கட்சி கிடையாது. எனவே இங்கே வயது முக்கியம் கிடையாது” என்று கூறிவிட்டு பயணத்தைத் தொடங்கினார் அண்ணாமலை.

-வேந்தன்

சசிகலா விவகாரம்: பன்னீருக்கு முனுசாமி மூலமாக எடப்பாடி எச்சரிக்கை! ...

7 நிமிட வாசிப்பு

சசிகலா விவகாரம்:   பன்னீருக்கு முனுசாமி மூலமாக எடப்பாடி எச்சரிக்கை!

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்கும் பிஜிஆர்: அண்ணாமலையின் பதில்!

4 நிமிட வாசிப்பு

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்கும் பிஜிஆர்: அண்ணாமலையின் பதில்!

துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?

7 நிமிட வாசிப்பு

துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?

புதன் 14 ஜூலை 2021