மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 14 ஜூலை 2021

இப்படிச் செய்யலாமா?: முன்னாள் எம்.பி.க்கு நீதிமன்றம் கேள்வி!

இப்படிச் செய்யலாமா?: முன்னாள் எம்.பி.க்கு நீதிமன்றம் கேள்வி!

பதவிக் காலம் முடிந்ததும் அரசுக்குச் சொந்தமான இடங்களைக் காலி செய்ய வேண்டுமென்று எம்.பி. எம்.எல்.ஏ.க்களுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது.

மதுரை ஆனையூர் பகுதியைச் சேர்ந்த ஆர்.கோபாலகிருஷணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் அதிமுகவைச் சேர்ந்த நான் மதுரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளேன். தல்லாகுளம் அழகர் கோயில் மெயின் ரோட்டில் மாநகராட்சிக்குச் சொந்தமான கட்டிடத்தில் வாடகை அடிப்படையில் எனது சொந்த அலுவலகம் இருந்தது.

கடந்த மார்ச் 19ஆம் தேதி, மதுரை வடக்கு தொகுதி பறக்கும் படை சிறப்பு வட்டாட்சியர் எனது அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து எந்த நோட்டீசும் கொடுக்கப்படாமல் எனது அலுவலகத்திற்கு மாநகராட்சி ஆணையரின் உத்தரவின் பேரில் சீல் வைக்கப்பட்டது. இதுதொடர்பாக தல்லாகுளம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

மாநகராட்சி ஆணையரின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது, எனது அலுவலகத்துக்கு வைத்த சீலை உடைத்து மீண்டும் என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று (ஜூலை 13) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் வீர கதிரவன் ஆஜரானார்.

அவர்,"எம்.பி.யாக இருந்தபோது கோபாலகிருஷணனின் அலுவலக பணிக்காக மாநகராட்சி சார்பில் இடம் ஒதுக்கப்பட்டது. அவரது பதவிக்காலம் முடிந்ததும் அந்த இடம் அவரது கட்டுப்பாட்டில் தான் உள்ளது. இதற்கு வாடகை பாக்கியும் தரப்படவில்லை" என்று தெரிவித்தார்.

இதை விசாரித்த நீதிபதி, மனுதாரர் தற்போது எந்த பதவியிலும் இல்லை. பதவிக்காலம் முடிந்ததும் எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் அரசுக்குச் சொந்தமான இடத்திலிருந்து காலி செய்து இருக்க வேண்டும்.

பொறுப்பான பதவியில் உள்ளவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடலாமா?. இது ஏற்புடையதல்ல. உடனடியாக மாநகராட்சி கட்டிடத்தை காலி செய்து ஒப்படைக்க வேண்டும். வாடகை பாக்கி இருந்தால் அதிகாரிகள் அதனை வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு மனுவைத் தள்ளுபடி செய்தார்.

-பிரியா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

புதன் 14 ஜூலை 2021