மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 13 ஜூலை 2021

2ஜிபி டேட்டாவை தொடர்ந்து வழங்குக: ஈபிஎஸ்

2ஜிபி டேட்டாவை தொடர்ந்து வழங்குக: ஈபிஎஸ்

அதிமுக அரசால் வழங்கப்பட்ட கல்லூரி மாணவர்களுக்கான 2 ஜிபி டேட்டா கார்டுகளை புதுப்பித்து வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

ஆன்லைனில் படிக்கும் மாணவர்களுக்காகத் தமிழக அரசு கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி மாணவர்கள் 9.69 லட்சம் பேருக்கு ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை தினமும் 2 ஜிபி டேட்டா கார்டு இலவசமாக வழங்கப்பட்டது. இந்த இலவச 2 ஜிபி டேட்டா மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

தற்போது பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்று தெரியாத நிலையில் இதனை புதுப்பித்து வழங்க வேண்டும் என்று ஈபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “கலை-அறிவியல், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே முதலாம் ஆண்டு படித்த மாணவர்கள் இரண்டாம் ஆண்டுக்கும், இரண்டாம் ஆண்டு படித்த மாணவர்கள் மூன்றாம் ஆண்டுக்கும், மூன்றாம் ஆண்டு படித்த மாணவர்கள் நான்காம் ஆண்டுக்கும் சென்றுள்ளனர்.

கோவிட் தொற்று இன்னும் முழுமையாகக் குறையாத காரணத்தால் இந்த ஆண்டும் கல்லூரிகள் திறக்கப்படுமா? நேரடி வகுப்புகள் நடைபெறுமா? அல்லது ஆன்லைன் வாயிலாகத்தான் கல்வி கற்க வேண்டுமா? என்று புரியாமல் மாணவச் செல்வங்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

எனவே, கல்வி நிறுவனங்கள் தற்போது செயல்படவில்லை என்றாலும், மாணாக்கர்களில் சிலர் இந்த ஆண்டுக்கான பாடங்களை இணையவழி, இணையவழி நூலகம், கூகுள் சர்ச் போன்ற முறைகளில் தரவிறக்கம் செய்து பயின்று வருகிறார்கள்.

அதிமுக அரசால் வழங்கப்பட்ட விலையில்லா 2ஜிபி டேட்டா கார்டுகள் இந்த ஆட்சி வந்த பிறகு புதுப்பிக்கப்படாததால், அனைத்து மாணவர்களும் இணையவழியில் பாடம் படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகச் செய்திகள் வருகின்றன.

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாணவர்கள் ஏழ்மை மற்றும் மத்திய தர குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்களால் மாதம் ஒன்றுக்கு சுமார் 200 ரூபாய் முதல் அதிகபட்சம் 400 ரூபாய் வரை செலவு செய்து, அதிமுக அரசு வழங்கிய டேட்டா கார்டுகளைப் புதுப்பிக்க முடியாத நிலையில் உள்ளனர்.

எனவே, மாணவர்கள் தொடர்ந்து சிறந்த முறையில் கல்வி கற்கவும், அவர்களுடைய கற்றல் திறனை மேம்படுத்தவும், திமுக அரசு ஏற்கெனவே அதிமுக அரசால் வழங்கப்பட்ட விலையில்லா 2 ஜிபி டேட்டா கார்டுகளை புதுப்பித்தும், இந்த ஆண்டு புதிதாகச் சேரும் மாணவர்களுக்குப் புதிய அட்டைகளை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

-பிரியா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

செவ்வாய் 13 ஜூலை 2021