மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 13 ஜூலை 2021

மாவட்டத்துக்கு ஒரு சட்டக் கல்லூரி : அமைச்சர் ரகுபதி

மாவட்டத்துக்கு ஒரு சட்டக் கல்லூரி : அமைச்சர் ரகுபதி

தமிழ்நாட்டில் மாவட்டத்துக்கு ஒரு சட்டக் கல்லூரி அமைப்பதே அரசின் கொள்கை என சட்டத் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

தலைமை செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி,” தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிறைகளிலும் தவறுகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அதை அரசு திருத்தி கொண்டும், வரும்காலங்களில் நடக்காமல் இருப்பதையும் உறுதி செய்து வருகிறது.

அரசு வழக்குகளின் அன்றன்றைய நிலவரங்களை அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் இணையத்தில் பதிவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நிலுவையில் உள்ள நிதி தொடர்பான வழக்குகளில் கூடுதல் கவனம் செலுத்தி வழக்கை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்க வழக்கறிஞர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சட்டத் துறையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்துக்கு ஒரு சட்டக்கல்லூரி என்பது அரசின் கொள்கை. திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தப்படி 6 சட்டக்கல்லூரிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதியளித்தார்.

”தற்போதுவரை, தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 1,186 நீதிமன்றங்களில், 990 நீதிமன்றங்கள் சொந்தக் கட்டடங்களில் உள்ளன. 109 நீதிமன்றங்கள் அரசு கட்டடங்களிலும், 86 நீதிமன்றங்கள் தனியார் கட்டடங்களிலும் வாடகையில் இயங்கி வருகின்றன. ஒன்றிய அரசு நிதி ஒதுக்கும்பட்சத்தில் வாடகை கட்டடங்களில் உள்ள நீதிமன்றங்களுக்கு சொந்த கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தை மேம்படுத்துதல் மற்றும் புதிய பாடப்பிரிவுகளை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.

-வினிதா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

செவ்வாய் 13 ஜூலை 2021