மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 12 ஜூலை 2021

‘உலக நாடுகளுக்கே உணவை கொடுக்கலாம்’: வெங்கையா நாயுடு

‘உலக நாடுகளுக்கே உணவை கொடுக்கலாம்’: வெங்கையா நாயுடு

நாட்டில் நிலையான விவசாயத்தை மேற்கொள்வதற்கு வேளாண் பொருட்களுக்குச் சிறந்த விலைகளை நிர்ணயிப்பதும், விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் தகுந்த கடன் உதவிகளை வழங்குவதும் மிகவும் அவசியம் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

ஹைதராபாத்தில் உள்ள டாக்டர் மரி சென்னா ரெட்டி மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யலமஞ்சலி சிவாஜியின் ‘பல்லேக்கு பட்டாபிஷேகம்' என்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு புத்தகத்தை வெளியிட்ட பின் பேசிய குடியரசுத் துணை தலைவர், “விவசாயிகளுக்கு உரிய காலத்தில் உதவிகளை வழங்கினால், இந்தியா தன்னிறைவு அடைவது மட்டுமல்லாமல், வரும் காலங்களில் உலக நாடுகளுக்கே உணவை நம்மால் அளிக்க முடியும்” என்று தெரிவித்தார்.

மேலும் அவர், “வேளாண் பொருட்கள் சேமிப்புக் கிடங்குகளின் திறன்களை அதிகப்படுத்துவது, வேளாண் பொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்வதில் உள்ள இடர்பாடுகளைக் களைவது, மற்றும் உணவு பதப்படுத்துதலை ஊக்குவிப்பது போன்ற துறைகளில் கவனம் செலுத்த வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

கிராமங்களும், விவசாயமும் ஒன்றுடன் ஒன்று இணைந்திருப்பதாகவும், கிராமங்களில் கிராம சுயராஜ்யத்தை உருவாக்குவதற்கு அங்கிருக்கும் பிரச்சினைகளை முழுமையாக தீர்க்க வேண்டும். பருவநிலை மற்றும் வறட்சியை எதிர்கொள்ளும் விதை வகைகளை உருவாக்குமாறு விஞ்ஞானிகளைக் குடியரசுத் துணைத் தலைவர் கேட்டுக்கொண்டார்.

“நகரங்களுக்கு உணவை விநியோகிக்கும் அலைகளாக' மட்டுமே கிராமங்கள் கருதப்படக் கூடாது. பொது சமூகம், விவசாயிகள், வேளாண் விஞ்ஞானிகள், மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து லாபகரமான விவசாயத்தை உருவாக்கி, பொருளாதார முனையங்களாகக் கிராமங்களை மாற்றி மகாத்மா காந்தியின் கனவான கிராம சுயராஜ்ஜியத்தை அடைவதற்கு முயற்சியை மேற்கொள்ள வேண்டும்" என்றும் குறிப்பிட்டார்.

-பிரியா

உள்ளாட்சி வெற்றி: திமுகவினர் நடத்தும் கூவத்தூர் பாலிடிக்ஸ்! ...

6 நிமிட வாசிப்பு

உள்ளாட்சி வெற்றி: திமுகவினர் நடத்தும் கூவத்தூர் பாலிடிக்ஸ்!

மாற்றப்படும் அதிமுக தலைமை அலுவலகத்தின் பெயர்!

4 நிமிட வாசிப்பு

மாற்றப்படும் அதிமுக தலைமை அலுவலகத்தின் பெயர்!

ஆலயங்களில் பக்தர்கள்: அண்ணாமலை அழுத்தமா? ஆளுநர் அழுத்தமா?

6 நிமிட வாசிப்பு

ஆலயங்களில் பக்தர்கள்: அண்ணாமலை அழுத்தமா? ஆளுநர் அழுத்தமா?

திங்கள் 12 ஜூலை 2021