மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 12 ஜூலை 2021

வீடு தேடிச் சென்று, வீட்டு மனை பட்டாக்களை வழங்கிய அமைச்சர்!

வீடு தேடிச் சென்று, வீட்டு மனை பட்டாக்களை வழங்கிய அமைச்சர்!

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் மனு கொடுத்தவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை அமைச்சர் நாசர் நேற்று (ஜூலை 11) வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்த 55,000 குடியிருப்புகளுக்குக் கடந்த திமுக ஆட்சியின்போது வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.

ஆனால் கடந்த ஆட்சியில் இந்த பட்டா வழங்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டதாக இந்தப் பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடமிருந்து வந்த கோரிக்கையின் அடிப்படையில், ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 114 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாவை பால்வளத்துறை அமைச்சர் நாசர் வழங்கினார்.

பயனாளிகளுக்குப் பட்டா வழங்குவதற்காக திருமுல்லைவாயில் பகுதியில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அமைச்சர் நாசர் விழா மேடைக்கு வராமல், வீடு தேடிச் சென்று பட்டாக்களை வழங்கினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ஆவடி நகராட்சிக்கு உட்பட்ட 9 வார்டுகளில், 55,162 பட்டாக்கள் உள்ளன. இதுவரை 20,000 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. 35,000 பட்டாக்கள் இனி வரும் காலங்களில் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்க்கீஸ், ஆவடி வட்டாட்சியர் செல்வம், தனி வட்டாட்சியர் வில்சன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியின்போது அமைச்சருடன் சென்றனர்.

அமைச்சர் வீடு தேடிச் சென்று பட்டா வழங்கியது, அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

-பிரியா

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

5 நிமிட வாசிப்பு

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன? பாமக மறுப்பது ஏன்?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன?  பாமக மறுப்பது ஏன்?

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

6 நிமிட வாசிப்பு

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

திங்கள் 12 ஜூலை 2021