மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 12 ஜூலை 2021

கூட்டுறவு துறையில் முறைகேடு : அமைச்சரின் உத்தரவு!

கூட்டுறவு துறையில் முறைகேடு : அமைச்சரின் உத்தரவு!

தமிழ்நாட்டில் கூட்டுறவு துறையில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து வரும் 15ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்க வேண்டுமென்று அனைத்து மாவட்ட இணை பதிவாளருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூட்டுறவு துறை அமைச்சர் இ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் சார்பில், தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையம் தொடங்கப்பட்டுள்ளது.

புதிய பெட்ரோல், டீசல் விற்பனை நிலையத்தை திறந்து வைக்கும் விழா இன்று(ஜூலை 12) நடைபெற்றது. இதில், கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க புதிய உறுப்பினர்கள் 847 பேருக்கு, ரூபாய் 4.87 கோடி மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கினார்.

இதையடுத்து பேசிய அமைச்சர் இ.பெரியசாமி,” கலைஞர் கருணாநிதி தமிழ்நாடு முதல்வராக இருந்தபோது, விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்தார். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கி, பெரும் உதவி செய்தார்.

தற்போது, தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் விவசாயக் கடன், கல்விக் கடன் கூட்டுறவுச் சங்கங்களில் வைத்துள்ள நகைக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருக்கிறார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

கடந்த கால திமுக ஆட்சியில்தான் சாமானிய மக்களும் கூட்டுறவு சங்கத்தில் கடன் பெறலாம் என்ற நிலை உருவாக்கப்பட்டது. தற்போது, கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் வங்கிகளில் நகைக் கடன் மட்டுமின்றி அனைத்து வகையான கடன்களும் வழங்கப்பட வேண்டும். இதன் மூலம் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெற வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கடன் வழங்க அரசு தயாராக உள்ளது.

தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடந்திருக்கக் கூடிய முறைகேடுகள் குறித்து வரும் 15ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்க அனைத்து மாவட்ட இணைபதிவாளருக்கு முதல்வரின் அறிவுறுத்தலின்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் எந்தெந்தப் பகுதிகளில் பகுதிநேர நியாயவிலைக் கடைகள் அமைக்க வேண்டும், அதற்கான நிதி ஆதாரம் என்ன என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தேவையான பகுதிகளில் கூட்டுறவு மருந்தகங்கள், விவசாயப் பொருள்களைப் பாதுகாக்க குளிர்ப்பதன கிடங்கு, விற்பனை நிலையம் அமைக்கப்படும்” என்று தெரிவித்தார்.

-வினிதா

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

6 நிமிட வாசிப்பு

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

4 நிமிட வாசிப்பு

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

திங்கள் 12 ஜூலை 2021