மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 12 ஜூலை 2021

மக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்ற முதல்வர்!

மக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்ற முதல்வர்!

சென்னை தலைமைச் செயலகத்தின் முதலமைச்சர் தனிப் பிரிவில், இன்று(ஜூலை 12)முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.

தேர்தல் பரப்புரையின்போது, உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் மனுக்கள் பெறப்பட்டு, திமுக ஆட்சி அமைந்தவுடன் 100 நாட்களில் மனுக்களுக்கு தீர்வு காணப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

அறிவித்தப்படி, உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் நீட்சியாக, சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெறுவதற்காக முதலமைச்சரின் தனிப்பிரிவு செயல்பட்டு வருகிறது.

தலைமை செயலகத்தில் உள்ள முதலமைச்சரின் தனிப்பிரிவில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்படுவது வழக்கம். அதன்படி, கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் இந்த வாரம் முதலமைச்சரே நேரடியாக பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற உள்ளார் என அறிவிப்பு வெளியானது. அதற்கான ஏற்பாடுகளும் நடந்தன. ஆனால் மேகதாது அணை தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க வேண்டியிருந்ததால் குறித்த நேரத்தில் மனுக்களை பெற முதலமைச்சரால் வர இயலவில்லை.

இருப்பினும், மனுக்களை முதல்வரிடம் நேரடியாக கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் ஆர்வமுடன் காத்திருந்தனர்.

அனைத்து கட்சி கூட்டம் முடிந்த பின்பு,முதல்வரே நேரடியாக வந்து மக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டு, குறைகளை கேட்டு அறிந்தார்.

முதலமைச்சரின் தனிபிரிவில் அளிக்கப்படும் மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

-வினிதா

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

5 நிமிட வாசிப்பு

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன? பாமக மறுப்பது ஏன்?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன?  பாமக மறுப்பது ஏன்?

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

6 நிமிட வாசிப்பு

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

திங்கள் 12 ஜூலை 2021