மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 12 ஜூலை 2021

பள்ளிகளை திறக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு!

பள்ளிகளை திறக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு!

தமிழ்நாட்டில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் டி.சி. இளங்கோ கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் டி.சி. இளங்கோ இன்று(ஜூலை 12) பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷை சந்தித்து தனியார் பள்ளிகள் சார்பில் மனு ஒன்று அளித்தார். அதில், கொரோனா தொற்று காரணமாக 2020 மார்ச் 24ஆம் தேதிமுதல் பள்ளிகளை திறக்காமல் அரசின் உத்தரவுகளை முழுமையாகப் பின்பற்றிவருகிறோம்.

ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்களுக்கு முழுமையாக பாடங்களை நடத்த முடியவில்லை. அவ்வாறு நடத்தப்படும் பாடங்கள் 20 சதவிகிதம் மட்டுமே மாணவர்களை சென்றடைகிறது. நேரடி வகுப்பின் மூலமே மாணவர்களுக்கு கவனசிதறல் இல்லாமல் பாடம் நடத்த முடியும். அதுதான் சிறந்தது.

கொரோனா தொற்று குறைந்து வருவதால், பல்வேறு மாநிலங்கள் கல்வி நிலையங்களை திறக்க முடிவு செய்துள்ளன. அதனால், தமிழ்நாட்டிலும் 9முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டிசி இல்லாமல் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்த கூடாது. கட்டணம் செலுத்தாமல் படித்துவிட்டு வேறு பள்ளியில் சேரும் மாணவர்களால் நிர்வாகம் பாதிக்கப்படுகிறது. இது முறைகேடுகளுக்கும் வழிவகுக்கும் என்பதால் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். கட்டண நிர்ணயம் செய்வதற்கு கால அவகாசம் வழங்கவேண்டும். 2020-21ஆம் கல்வியாண்டிற்கான இலவச கட்டடாயக் கல்வி உரிமை கட்டணங்களை விரைவில் வழங்க வேண்டும்.

கொரோனா சூழ்நிலையை கருத்தில் கொண்டு தற்காலிக அங்கீகாரம் முடிந்த அனைத்துப் பள்ளிகளுக்கும் தொடர் அங்கீகாரத்தை மூன்று ஆண்டுகளுக்கு வழங்க வேண்டும். பத்து ஆண்டுகளுக்கு மேல் செயல்படும் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும்.

அரசு பொதுத் தேர்வு முடிவுகளை தனியார், அரசு பள்ளிகளுக்கென தனித்தனியாக வெளியிட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் மாநிலச் செயலாளர் டி.சி.இளங்கோ, 9முதல் 12ஆம் வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து முதல்வருடன் கலந்து ஆலோசித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார்.

-வினிதா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

திங்கள் 12 ஜூலை 2021